"அடேங்கப்பா" என்னா ஸ்பீடு.. அனல் பறக்கும் வேகத்தில் சாதனை படைத்த சிறுவன்!!

1 நிமிடம் 38 வினாடியில் 100 நாடுகளின் கொடியை பார்த்து நாட்டின் பெயர், தேசிய பறவையின் பெயர்களை கூறி சாதனை படைத்த சிறுவன்.

"அடேங்கப்பா" என்னா ஸ்பீடு.. அனல் பறக்கும் வேகத்தில் சாதனை படைத்த சிறுவன்!!

காஞ்சிபுரம் மாங்காடு பகுதியை சேர்ந்தவர் முத்துச்செல்வன்(9). நான்காம் வகுப்பு படித்து வரும் இவர் சிறு வயதில் இருந்தே உலக நாடுகளின் கொடிகளை பார்த்து அந்த நாட்டின் பெயர்களை கூறி வருவதை பயிற்சி எடுத்து வந்துள்ளார். இதனை சாதனையாக மாற்றி ஊக்குவிக்கும் விதமாக அவரது பெற்றோர் இவருக்கு பயிற்சி அளித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் 1 நிமிடம் 38 விநாடிகளில், 100 உலக நாடுகளின் கொடிகளை பார்த்து அந்த கொடிக்கு உண்டான நாட்டின் பெயர்களும், அந்த நாட்டின் தேசிய பறவையின் பெயர்களையும் மின்னல் வேகத்தில் கூறி சாதனை படைத்தார்.

இந்த சாதனையை இந்தியன் புக் ஆப் ஆசியா ரெக்கார்ட் அங்கீகரித்து உலக சாதனையாக அங்கீகரித்துள்ளது. மேலும் இதேபோல் பல்வேறு சாதனைகளில் ஈடுபட போவதாகவும் தெரிவித்துள்ளார்.