"ஆதி திராவிடர் நலத்துறைக்கு அறிவித்த நிதி வழங்குவதில்லை" - அமைச்சர் கயல்விழி செல்வராஜ்

"ஆதி திராவிடர் நலத்துறைக்கு அறிவித்த நிதி வழங்குவதில்லை" -  அமைச்சர் கயல்விழி செல்வராஜ்

மத்திய அரசு ஆதி திராவிடர் நலத்துறைக்கு அறிவித்த நிதியை வழங்குவதில்லை என்று ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தெரிவித்துள்ளார்.

சிவகங்கை ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஆதி திராவிட நலத்துறையின் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. ஆட்சியர் ஆஷா அஜித் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மாவட்டத்தை சேர்ந்த கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் மற்றும் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் பங்கேற்றார்.

கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தமிழக முதல்வர் அறிவுருத்தலின்படி ஒவ்வொரு மாவட்டமாக சென்று அரசின் நலத்திட்டங்கள் எவ்வாறு செயல்படுத்தப்பட்டு வருகிறது? என்றும் அதேபோல் சட்டமன்றத்தில் ஆதி திராவிட நலத்துறைக்கு அறிவித்த திட்டங்கள் மக்களை சென்றடைவதை உறுதி செய்யவும் இந்த கூட்டம் நடத்தப்பட்டு வருவதாகவும் மேலும் மக்களின் கோரிக்கைகளை அரசிற்கு எடுத்து செல்லவும் ஆய்வு கூட்டம் நடத்தி பெற்று வருவதாகவும் தெரிவித்தார்.

ஆதி திராவிட கல்லூரி மாணவர்களுக்கான விடுதிகள் மிகவும் மோசமான நிலையில் காணப்படுவது குறித்த கேள்விக்கு இந்த அரசு பொருப்பேற்றதிலிருந்து ஏராளமான புதிய விடுதிகள் கட்டப்பட்டு வருவதாகவும் குறிப்பாக 100 கோடி திட்ட மதிப்பில் 4 மாவட்டங்களில் புதிய ஆதி திராவிடர் கல்லூரி மாணவர்கள் விடுதி கட்டப்பட்டு வருவதாகவும் சென்னையில் 54 கோடியில் மாணவ, மாணவியர்களுக்கான 10 மாடி கொண்ட விடுதியும் கட்டப்பட்டு வருவதாகவும் மேலும் ஒவ்வொரு மாவட்டத்திலும் புதிய விடுதிகள் கட்ட ஆய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

மத்திய அரசு ஆதி திராவிடர் நலத்துறைக்கு ஒதுக்கிய நிதி பயன்படுத்தப்படாமல் திரும்ப அனுப்பட்டதாக எழும் குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு மத்திய அரசு ஆதி திராவிடர் நலத்துறைக்கு அறிவித்தவுடன் நிதியை வழங்குவதில்லை என்றும் தாமதமாகவும் இரண்டு, மூன்று தவனையாகவுமே நிதி வழங்குகிறது.

அதேபோல் மத்திய அரசு திரும்ப பெற்ற நிதி அடுத்த நிதியாண்டில் மீண்டும் பெற்றுக்கொள்ளலாம் என்றும் பேட்டியளித்தார்.இந்த கூட்டத்தில் ஏராளமான துறை சார்ந்த அதிகாரிகள் உடனிருந்தனர். 

இதையும் படிக்க   | " மாணவர்களின் நெஞ்சங்களில் நஞ்சு கலக்க கூடாது" - அன்புமணி ராமதாஸ் கருத்து