காசு இல்லாமல் பெட்ரோல் போட்ட வாலிபர்கள்.. பிடிக்க முயன்ற ஊழியருக்கு நேர்ந்த சோகம்

கோவையில் பெட்ரோல் பங்க் ஒன்றில் இருசக்கர வாகனத்திற்கு பெட்ரோல் நிரப்பிய 2 வாலிபர்கள் பணம் கொடுக்காமல் தப்ப முயன்ற நிலையில் இருசக்கர வாகனத்தை நிறுத்த முயன்ற ஊழியரை இழுத்து சென்று விபத்தில் சிக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.

காசு இல்லாமல் பெட்ரோல் போட்ட வாலிபர்கள்.. பிடிக்க முயன்ற ஊழியருக்கு நேர்ந்த சோகம்

கோவை கே என் ஜி புதூர் பகுதியில் பாரத் பெட்ரோலியம் நிறுவன பெட்ரோல் பங்க் ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்த பங்கில் நேற்று இரவு பெட்ரோல் நிரப்புவதற்காக இருசக்கர வாகனத்தில் 2 வாலிபர்கள் வந்துள்ளனர்.

200 ரூபாய்க்கு பெட்ரோல் நிரப்பிய அந்த வாலிபர்கள் பணம் கொடுக்காமல் அங்கிருந்து தப்பி ஓட முயன்ற போது சுதாரித்த பெட்ரோல் பங்க் ஊழியர் இருசக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்திருந்தவரின் கையை பிடித்துள்ளார். ஆனால் கண்ணிமைக்கும் நேரத்தில் அதிவேகமாக இருசக்கர வாகனத்தை இயக்கிய அந்த வாலிபர்கள் பெட்ரோல் பங்கு ஊழியரை தரதரவென இழுத்துச் சென்று விபத்தில் சிக்க வைத்து தப்பியோடியுள்ளனர்.

இதை தொடர்ந்து பங்க் ஊழியர்கள் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் அந்த வாலிபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும் இரு சக்கர வாகனத்தை வேறு எங்காவது இருந்து திருடி கொண்டு வந்தனரா என்ற அடிப்படையிலும் விசாரித்து வருகின்றனர்.