பருவமழை முன்னெச்சரிக்கை குறித்து ஆலோசனை...அமைச்சர்கள்,அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கிய முதலமைச்சர்...!

பருவமழை முன்னெச்சரிக்கை குறித்து ஆலோசனை...அமைச்சர்கள்,அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கிய முதலமைச்சர்...!

வடகிழக்கு பருவமழைக்கான அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார். 

வடகிழக்கு பருவமழை ஆலோசனைக் கூட்டம்:

வடகிழக்கு பருவமழை விரைவில் தொடங்கவுள்ள நிலையில், அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம், கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. அதில், வருவாய் மற்றும் பேரிடர் மீட்பு துறை, நகராட்சி நிர்வாகம், வேளாண்மை, மின்சாரம் உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். இதில், வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பே, முன்னெச்சரிக்கை பணிகளை விரைந்து மேற்கொள்ள பல்வேறு அறிவுரைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.  

பேரிடர் காலங்களில் மழையால் சாலைகள் சேதமடைந்தால், அவற்றை உடனுக்குடன் செப்பனிட்டு, போக்குவரத்தை சீராக கவனிக்க திட்டமிட வேண்டும் என முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிக்க: பாஜகவின் பிம்பங்களை உடைத்து சவால்களை சாதனைகளாக மாற்றுவாரா அசோக் கெலாட்!!!

சென்னையில் வடகிழக்கு பருவமழை காலத்தில் மழைநீர் தேங்காது என ஓரளவு நம்புவதாக குறிப்பிட்ட மு.க.ஸ்டாலின், தெருக்களில் வெள்ளத்தை உறிஞ்சி எடுக்கும் பம்புகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

மழைக்காலத்திற்கு முன்பே ஏரி குளங்களைத் தூர்வாரி, கரைகளை பலப்படுத்த வேண்டும் என்றும் முதலமைச்சர்  அறிவுறுத்தயுள்ளார். மேலும், அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என முதலமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.