மழை நீர் தேங்குவதற்கு நிரந்தர தீர்வு காண ஆலோசனை - அமைச்சர் கே.என்.நேரு பேச்சு!

மழை நீர் தேங்குவதற்கு நிரந்தர தீர்வு காண ஆலோசனை - அமைச்சர் கே.என்.நேரு பேச்சு!

இனிவரும் காலங்களில் மழைநீர் தேங்காாமல் இருக்க நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.

அமைச்சர்கள் ஆய்வு:

சென்னையில் மழை நீர் தேங்கிய இடங்களில், மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து அமைச்சர்கள் கே.என்.நேரு, சேகர்பாபு, மேயர் பிரியா மற்றும் அதிகாரிகள் உள்ளிட்டோர் ஆய்வு மேற்கொண்டனர். சென்னை புதுப்பேட்டை வேலாயுதம் தெரு, மாண்டியத் பூங்கா, பெரம்பூர், வியாசர்பாடி உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர். தண்ணீர் தேங்கிய இடங்களில், இனி மோட்டார் வைக்காமல் மழைநீர் வடிய என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது குறித்து, அதிகாரிகளுடன் ஆலோசித்து வருவதாக அமைச்சர் கே.என். நேரு தெரிவித்தார். 

இதையும் படிக்க: நடந்தது நகர சபையா? அல்லது திமுகவின் நாடக சபையா? மநீம அறிக்கை!

அதிகாரிகளுடன் ஆலோசனை:

தொடர்ந்து, சென்னை எழும்பூர் வேலப்பன் தெரு உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் தேங்கிய இடங்களில் ஆய்வு மேற்கொண்டனர். தற்போது மழை நீர் முழுவதுமாக அகற்றப்பட்டுள்ள நிலையில், மழைநீர் தேங்கியதற்கான காரணம் என்ன என்றும், வரும் காலங்களில், மழைநீர் தேங்காதவாறு நிரந்தர தீர்வு காணும் வகையில் அதிகாரிகளுடன் கலந்தாலோசித்தார். 

நிரந்தர தீர்வு காண நடவடிக்கை:

இதனைத் தொடர்ந்து, சென்னை கொளத்தூர் பகுதியில் மழை நீர் பாதித்த பகுதிகளிலும் அமைச்சர்கள் ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கே.என். நேரு, திருப்புகழ் கமிட்டி மீண்டும் கள ஆய்வு செய்ய உள்ளதாக தெரிவித்தார். மேலும், திரு.வி.க. நகர் மற்றும் கொளத்தூரில் மட்டுமே மழை நீர் தேங்கியுள்ளது என்றும், இனிவரும் காலங்களில் மழைநீர் தேங்காாமல் இருக்க நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.