குறைந்த வாடகையில் விவசாய கருவிகள்.. கொடியசைத்து துவக்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!!

குறைந்த வாடகையில் விவசாய கருவிகள்.. கொடியசைத்து துவக்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!!

22 கோடி ரூபாய் செலவில் கொள்முதல் செய்யப்பட்ட வேளாண் கருவிகளை, சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

குறைந்த வாடகையில் விவசாய கருவிகள்

வேளாண் பொறியியல் துறை சார்பில், 497 நில மேம்பாட்டு இயந்திரங்கள், ஆயிரத்து 226 சிறுபாசனத் திட்ட இயந்திரங்கள் மற்றும் டிராக்டர்களுடன் இயங்கும் வேளாண் கருவிகள் ஆகிவை, தமிழக அரசால் நிர்ணயிக்கப்பட்ட குறைந்த வாடகையில் விவசாயிகள் பயன்பாட்டிற்கு வழங்கப்படுகிறது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

இந்நிலையில், இந்த திட்டத்தை விரிவுபடுத்தும் விதமாக, 22 கோடியே 34 லட்ச ரூபாய் செலவில், 185 டிராக்டர்கள், 185 ரோட்ட வேட்டர்கள் மற்றும் 185 கொத்து கலப்பைகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன.

இந்த இயந்திரங்களை குறைந்த வாடகைக்கு வழங்குவதற்கான அடையாளமாக 25  டிராக்டர் ரோட்டர்களும், 25 டிராக்டர் கொத்து கலப்பைகளையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை செயலகத்தில் இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

ஆன்லைனில் பணம் செலுத்தும் வசதி

விவசாயிகள் தங்களுக்கு தேவையான நவீன வேளாண் இயந்திரங்களை இ-வாடகை கைப்பேசி செயலி மூலம் முன்பதிவு செய்து, ஆன்லைனில் பணம் செலுத்திக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்பதிவுகள்

கடந்த ஜனவரி மாதம் தொடங்கி வைக்கப்பட்ட இந்த செயலி மூலம் தற்போது வரை 25 ஆயிரத்து 78 முன்பதிவுகள் செய்யப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் அரசுக்கு 17 கோடியே 40 லட்சம் ரூபாய் வாடகை முன்பணம் கிடைத்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.