ஆர் எஸ் எஸ் பேரணிக்கு அனுமதி - நீதிமன்ற விதிமுறைகளை பின்பற்ற டிஜிபி உத்தரவு!!!

ஆர் எஸ் எஸ் பேரணிக்கு அனுமதி -   நீதிமன்ற விதிமுறைகளை பின்பற்ற டிஜிபி உத்தரவு!!!

வருகிற 16ஆம் தேதி ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு தமிழக காவல்துறை சார்பில் அனுமதி வழங்கி உள்ள நிலையில் சென்னை உயர் நீதிமன்றம் குறிப்பிட்ட வழிமுறைகளை பின்பற்றி பேரணியில் ஈடுபட வேண்டும் என டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

பேரணியின் போது எந்த விதமான பாடலோ அல்லது சைகைகளோ காண்பிக்காமல் நடக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பொது மக்களுக்கு இடையூறாகவும், வாகன நெரிசல் ஏற்படாத வகையிலும் பேரணி நடத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பேரணியில் கலந்துகொள்வோர் எந்தவிதமான குச்சி, லத்தி போன்ற ஆயுதங்களை கொண்டு செல்லக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பினால் கடும் நடவடிக்கை: டிஜிபி சைலேந்திரபாபு  எச்சரிக்கை | dgp sylendra babu - hindutamil.in

மேலும் படிக்க | அனைத்துக்கும் ஒரே அட்டை... அது என்ன சிங்கார சென்னை அட்டை.

பேரணி நடத்தும் ஒருங்கிணைப்பாளர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனம் உள்ளிட்ட வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊர்வலம் அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே செல்ல வேண்டும், வேறு பாதையிலோ அல்லது போக்குவரத்துக்கு இடையூறாக செல்லக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. உத்தரவை மீறி பேரணியில் ஈடுபடும் நபர்கள் மீது காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்கது.