ஆம்பூர் : பாலாற்றில் நீர்வரத்து அதிகரிப்பு...! பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை...!

ஆம்பூர் அருகே பாலாற்றில் நீர்வரத்து அதிகரிப்பு...கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வருவாய்த் துறையினர் வெள்ள நீர் எச்சரிக்கை

ஆம்பூர் : பாலாற்றில் நீர்வரத்து அதிகரிப்பு...! பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை...!

தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த சில தினங்களாக பல மாவட்டங்களில் தொடர் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்டத்திலும், கடந்த ஒரு வார காலமாக விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. மேலும் வாணியம்பாடி அருகே, தமிழக ஆந்திர எல்லைப் பகுதிகளான நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் பாலாற்றில் வெள்ளம் சென்று கொண்டிருக்கும் நிலையில்,  திருப்பத்தூர், நாட்றம்பள்ளி, வாணியம்பாடி, ஆம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து ஒன்றரை மணி நேரமாக கன மழை பெய்தது.

அதனால் பாலாற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் ஆம்பூர் அருகே குடியாத்தம் - பச்சகுப்பம் செல்லும் தரைப்பாலம் ஏற்கனவே மூழ்கிய நிலையில் அவ்வழியாக செல்லும் போக்குவரத்தும் தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் வருவாய்த்துறை மற்றும் காவல் துறையினர், வெள்ள நீர் அதிகரிப்பால் அவ்வழியாக செல்லும் பொது மக்களுக்கும், கரையோரம் உள்ள மக்களுக்கும் முன்னெச்சரிக்கையாக வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர்.