சூடானிலிருந்து மீட்கப்பட்டவர்களில்,... தடுப்பூசி செலுத்தாதவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்....!

சூடானிலிருந்து மீட்கப்பட்டவர்களில்,...  தடுப்பூசி  செலுத்தாதவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்....!

சூடான் நாட்டில் நடைபெற்று வரும் உள்நாட்டு போரில் இருந்து இந்தியர்களை மீட்க மிஷன் காவேரி மூலம் இந்திய அரசாங்கம் சூடானில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது.

உள்நாட்டுப்போர் நடந்து வரும் சூடானில் இருந்து இதுவரை சுமார்  3 ஆயிரம் இந்தியர்கள் மீட்டு வெளியேற்றப்பட்டு உள்ளதாக மத்திய அரசு கூறியுள்ளது. ஆப்பிரிக்க நாடான சூடானில் அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக ராணுவம் மற்றும் துணை ராணுவத்துக்கு இடையே உள்நாட்டுப்போர் மூண்டுள்ளது. 

தலைநகர் கார்தூம் உள்பட நாட்டின் பல பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனையடுத்து வெளிநாட்டு வாழ் மக்கள் அனைவரும் மீட்கப்பட்டு வருகின்றனர். அந்தவகையில் ஆபரேஷன் காவேரி என்ற திட்டத்தின் மூலம் இதுவரை ஒட்டுமொத்தமாக இதுவரை சுமார்  3 ஆயிரம் இந்தியர்கள் சூடானில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக வெளியுறவுத்துறை செயலாளர் வினய் குவாத்ரா தெரிவித்துள்ளார்.

src="https://akm-img-a-in.tosshub.com/indiatoday/images/story/202304/futsgy9xwaaxnd1_0-sixteen_nine.jpg?VersionId=LOmfQAdwMSoi4AY7.HLmRtN47J5WXWT2&size=690:388" alt="Welcome to safe hands': 10th batch of Indians departs from Sudan as Operation Kaveri intensifies - India Today" width="311" height="175" /> src="https://c.ndtvimg.com/2023-04/4rbhrnc_operation-kaveri-3rd-batch-_625x300_26_April_23.jpg?im=FeatureCrop,algorithm=dnn,width=650,height=400" alt="Operation Kaveri: 3rd Batch Of 135 Indians Reaches Saudi Arabia" width="285" height="175" /> src="https://img-cdn.thepublive.com/fit-in/1280x960/filters:format(webp)/newsdrum-in/media/media_files/2niz07J8dmiKM4pZFj0u.jpg" alt="India launches Operation Kaveri to evacuate its nationals from Sudan" width="310" height="174" /> />மேலும்,  சூடானில் சிக்கியுள்ள இந்தியர்களில் தமிழர்களை கண்டறிந்து அவர்களை சொந்த மாவட்டத்திற்கு அனுப்பி வைக்கும் முழு பொறுப்பையும் செலவையும் தமிழக அரசு ஏற்றுள்ளது. அதன்படி,  ஆபரேஷன் காவேரியின் கீழ், சூடானில் இருந்து இதுவரை 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வெளியேற்றப்பட்டுள்ளனர். 

இந்நிலையில் அவ்வாறு மீட்கப்பட்டவர்களில் மஞ்சல் காய்ச்சலுக்கான தடுப்பூசி செலுத்தாத 117 பயணிகள்  தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

இதையும் படிக்க     ]  href="https://www.malaimurasu.com/Echoes-of-Operation-Kaveri-Family-from-Madurai-rescued-from-Sudan" target="_blank" rel="noopener">ஆபரேஷன் காவேரி' எதிரொலி...! சூடானிலிருந்து மீட்கப்பட்ட மதுரையை சேர்ந்த குடும்பம்...!

மேலும், அவர்களில் அறிகுறிகள் இல்லாமல் இருந்தால், ஏழு நாட்களுக்குப் பிறகு பயணிகள் விடுவிக்கப்படுவார்கள் என்றும் சுகாதாரத்துறையின் ஒத்துழைப்போடு சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு சோதனை மேற்கொள்ளப்படும் என வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதையும் படிக்க     href="https://www.malaimurasu.com/The-action-packed-Operation-Kaveri-9-people-of-Tamil-Nadu-rescued-So-far-2-thousand-Indians" target="_blank" rel="noopener">அதிரடியான ஆபரேஷன் காவேரி ....! தமிழ்நாட்டு மக்கள் 9 பேர் மீட்பு.....! இதுவரை 2 ஆயிரம் இந்தியர்கள்..!