ஏற்கனவே 15 ஆண்டுகள்...மேலும் ஒன்றை ஆண்டுகளா...? தமிழக அரசுக்கு அன்புமணி ராமதாஸ் கண்டனம்!

ஏற்கனவே 15 ஆண்டுகள்...மேலும் ஒன்றை ஆண்டுகளா...? தமிழக அரசுக்கு அன்புமணி ராமதாஸ் கண்டனம்!

மக்கள் பாதுகாப்பிலும், சுற்றுச்சூழலிலும் அக்கறை இல்லாத தமிழக அரசின் கோரிக்கையை பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வன்மையாக கண்டித்துள்ளார்.

தமிழ்நாட்டில்  கடந்த 15 ஆண்டுகளைக் கடந்த அரசுப் பேருந்துகளையும், பிற அரசுத் துறை ஊர்திகளையும் உடனடியாக பயன்பாட்டிலிருந்து நீக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். 

இதையும் படிக்க : மதம் மாறியவர்களுக்கும் சலுகைகள் கிடைக்க வேண்டும்...ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட முதலமைச்சரின் தனி தீர்மானம்!

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், தமிழ்நாட்டில் ஆயிரத்து 500 அரசு போக்குவரத்துக்கழக பேருந்துகள் உள்பட 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசு ஊர்திகள் 15 ஆண்டுகளைக் கடந்தும் இயக்கப்பட்டு வருவதாகவும், அவற்றை மேலும் ஒன்றரை ஆண்டுகள் இயக்க அனுமதிக்க வேண்டும் என்றும் மத்திய அரசை தமிழ்நாடு அரசு கேட்டுக் கொண்டிருக்கிறது. மக்கள் பாதுகாப்பிலும், சுற்றுச்சூழலிலும் அக்கறை இல்லாத இந்தக் கோரிக்கை கண்டிக்கத்தக்கது என அன்புமணி தனது அறிக்கையில் கூறியுள்ளார்.