ஆலை குறித்து கருத்து தெரிவித்த ஆளுநர், ஆன்லைன் ரம்மி தடை மசோதாவுக்கு ஏன் ஒப்புதல் வழங்கவில்லை..? அம்புமணி ராமதாஸ் கேள்வி...!

ஆலை குறித்து கருத்து தெரிவித்த ஆளுநர், ஆன்லைன் ரம்மி தடை மசோதாவுக்கு ஏன் ஒப்புதல் வழங்கவில்லை..? அம்புமணி ராமதாஸ் கேள்வி...!


ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது  எண்ணற்ற உயிர்கள் பலியாகின. நெடிய போராட்டத்திற்கு பிறகு ஸ்டெர்லைட் ஆளை மூடப்பட்டது. இவ்வாறிருக்க, அந்த போராட்டமானது வெளிநாட்டு முதலீடு மூலமாக ஏற்பாடு செய்யபப்ட்டு மக்களாய் தூண்டிவிடப்பட்டதாகும் என ஆளுநர் தெரிவித்த கருத்துக்கு அவர் உரிய பதில் அளிக்க வேண்டும் என பா. ம. க. தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறினார். இந்த போராட்ட மக்களை குறித்து கருத்து தெரிவிக்க முடிந்த ஆளுநருக்கு ஆன்லைன் சூதாட்ட மசோதாவை குறித்து  செயல்பட முடியாதா? என அபிமானி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். 
ஆன்லைன் சூதாட்ட தடை மற்றும் ஆன்லைன் விளையாட்டுகளை முறைப்படுத்துவது தொடர்பாக ஆய்வு செய்ய சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி சந்துரு தலைமையில் 5 பேர் கொண்ட குழுவை அமைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். அந்தக் குழு பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு, அரசுக்கு அறிக்கையைச் சமர்ப்பித்தது.

இதன் தொடர்ச்சியாக, ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை விதிப்பது தொடர்பாக அரசு சார்பில் பொதுமக்களிடம் கருத்து கேட்கப்பட்டது. இந்த தரவுகளின் அடிப்படையில், ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை விதிக்க தமிழக அரசு முடிவு செய்தது. அதன்படி ஆன்லைன் சூதாட்ட தடை மற்றும் ஆன்லைன் விளையாட்டு ஒழுங்குபடுத்துதல் அவசர சட்ட மசோதாவை தமிழ்நாடு  அரசு உருவாக்கியது. அதற்கு கடந்த மாதம் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து ஆன்லைன் சூதாட்டம் அவசர சட்டத்துக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.

இதுகுறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டத்தை முழுமையாக தடை செய்துள்ளார்கள். இதனை பாமக முழுமையாக வரவேற்கிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரடியாக சந்தித்து பலமுறை கோரிக்கை வைத்திருக்கிறோம்.இதற்கு காரணம் பல லட்சம் குடும்பத்தினர் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். தமிழக அரசின் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவுக்கு ஆளுநர் அக்.1ம் தேதி ஒப்புதல் கொடுத்துவிட்டார். தொடர்ந்து 3ம் தேதி அரசிதழில் சட்டம் வெளியிடப்பட்டுவிட்டது. ஆனால் இந்த சட்டம் பற்றி 4 நாட்களாக ஏன் வெளியிடவில்லை என்று புரியவில்லை. இப்போது சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதன்பின்னர் நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்டத்தை யாராவது மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டம் குறித்த மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியது உள்நோக்கம் கொண்டதாகும். இரு காரணங்களின் அடிப்படையில் இது உள்நோக்கம் கொண்டதாகும். முதலாவதாக ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்யும் அதிகாரம் சட்டபேரவைக்கு இல்லை என இந்திய அரசியலமைப்பின் எந்த பிரிவும் கூறவில்லை. 
இரண்டாவதாக ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை என்று ஆளுநர் உறுதியாக நம்பியிருந்தால் கடந்த அக்டோபர் மதம் 19-ம் தேதி சட்டம் இயற்றி அனுப்பியஉடனேயே அவர் அதைத் திருப்பி அனுப்பியிருக்கலாம். அப்படி அனுப்பி இருந்தால் தமிழ்நாடு அரசு உடனடியாக புதிய சட்டம் நிறைவேற்றியிருக்கும். மீண்டும் இரண்டாவது முறையாக அனுப்பப்பட்ட மசோதாவுக்கு கண்டிப்பாக ஒப்புதல் அளித்திருக்க வேண்டும். அவ்வாறு செய்யாமல் அதை கிடப்பில் போட்டது ஏன்?  என அன்புமணி ராமதாஸ் கேள்வியெழுப்பினார்.


தமிழக அரசின் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவுக்கு ஆளுநர் அக்.1ம் தேதி ஒப்புதல் கொடுத்துவிட்டார். தொடர்ந்து 3ம் தேதி அரசிதழில் சட்டம் வெளியிடப்பட்டுவிட்டது. ஆனால் இந்த சட்டம் பற்றி 4 நாட்களாக ஏன் வெளியிடவில்லை என்று புரியவில்லை. இப்போது சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதன்பின்னர் நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்டத்தை யாராவது மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கூறுகையில் தெரிவித்துள்ளார்.

 இதையும் படிக்க:.. ஆளுநர் ஆளுநராக இருக்க வேண்டும்...! மன்சூர் அலிகான்...!! - https://www.malaimurasu.com/posts/tamilnadu/governor-should-be-governor-mansoor-alikhaan