"ராகிங்கில் நான் ஈடுபட மாட்டேன்" பெற்றோர் மற்றும் மாணவர்கள் உறுதி அளிக்க வேண்டும்: அண்ணா பல்கலைக்கழகம் அதிரடி

ராகிங்கில் நான் ஈடுபட மாட்டேன் என்று மாணவரும், என் பிள்ளை ராகிங்கில் ஈடுபட மாட்டார் என்று பெற்றோரும் ஆன்லைனில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது.

"ராகிங்கில் நான் ஈடுபட மாட்டேன்" பெற்றோர் மற்றும் மாணவர்கள் உறுதி அளிக்க வேண்டும்: அண்ணா பல்கலைக்கழகம் அதிரடி

பல்கலைக் கழக மானியக்குழுவின் உத்தரவின் பேரிலும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையிலும் எந்த ஒரு மாணவராக இருந்தாலும் சரி, கல்லூரி வளாகத்தின் உள்ளேயோ அல்லது வெளியிலோ ராகிங்கில் ஈடுபடுவது சட்டப்படி குற்றமாகும். இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழகம் கல்லூரி வளாகத்தில் ராகிங்கில் ஈடுபட்ட மாட்டேன் என்று உறுதி அளிக்க வேண்டுமென தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் ராகிங் தடுப்பு சட்டத்தின் படி, ராகிங்கில் ஈடுப்பட மாட்டேன் என ஆன்லைன் மூலம் பிராமண பத்திரத்தை மாணவரும், அவரது பெற்றோர் அல்லது பாதுகாவலரும் தாக்கல் செய்ய வேண்டும்.மேலும் www.antiragging. in or www.amanmovement.org என்ற இணையதளங்களில் பதிவு செய்து அதையொட்டி வரும் மின்னஞ்சலை கல்லூரி, பல்கலைக்கழக சிறப்பு அலுவலருக்கு அனுப்பி வைக்க வேண்டும்’ என்று தெரிவித்துள்ளது.