அண்ணாமலை  அரசியலில் ஒரு கத்துக்குட்டி - முன்னாள் அமைச்சர் பளீர்!!!

அண்ணாமலை  அரசியலில் ஒரு கத்துக்குட்டி -   முன்னாள் அமைச்சர் பளீர்!!!

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுகவின் தலைமை அலுவலகமான எம்ஜிஆர் மாளிகையில் அதிமுகவின் செயற்குழு கூட்டம் அக்கட்சியின் அவை தலைவர் தமிழ் மகன் உசேன் மற்றும் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெற்றது. இந்த செயற்குழு கூட்டத்தில் அதிமுகவின் செயற்குழு உறுப்பினர்கள் அதிமுக முன்னாள் அமைச்சர்களான டி. ஜெயக்குமார் எஸ் பி வேலுமணி செம்மலை உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர். மேலும் செயற்குழு கூட்டத்தில் 15 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது அதேபோன்று கர்நாடக சட்டசபை தேர்தல் மற்றும் அதிமுகவில் உறுப்பினர் சேர்க்கை உள்ளிட்ட விஷயங்கள் குறித்து கலந்து ஆலோசிக்கப்பட்டது. இந்தக் கூட்டத்தில் அதிமுகவின் அவை தாசிரியர் தமிழ் மகன் உசேனுக்கு கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உயர் ரக கார் ஒன்றை வழங்கினார்.


முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர் சந்திப்பு

எடப்பாடி கழக பொதுச்செயலாளராக தேர்ந்தெடுத்த பின்னர் சிறப்பான முறையில் கட்சியின் செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. செயற்குழு கூட்டத்தில் முத்தான 15 தீர்மானங்கள் ஒருமனதோடு செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது

20 8 2023 அன்று மதுரையில் இந்திய கண்டத்திலேயே எந்த கட்சியும் நடத்திடாத அளவிற்கான எழுச்சி மாநாடு நடைபெற உள்ளது, அரசியலில் ஒரு மிகப்பெரிய திருப்புமணியை ஏற்படுத்தும் வகையில் அந்த மாநாடு நடைபெறும் எனக் குறிப்பிட்டார். முன்பே வலுவாக இருக்கும் அதிமுக கட்சியினை மேலும் வலுப்படுத்துவதற்கான கலந்துரையாடல்கள் செயற்குழு கூட்டத்தில் நடைபெற்றன. எந்த முடிவுகளாய் இருந்தாலும் செயற்குழு பொறுத்த வரையில் கழகப் பொதுச் செயலாளருக்கு அளித்து விட்டதாகவும் செயற்குழு கொடுத்து அதிகாரத்தின்படி கழக பொதுச்செயலாளர் ஒரு முடிவை அறிவிப்பார் என தெரிவித்தார்.

மேலும் படிக்க | மக்களுடன் சேர்ந்து பயணிப்பது தான் திராவிட இயக்கம் - உதயநிதி ஸ்டாலின் புகழாரம்!!!

நான் ஐம்பது வருடங்கள் அரசியலில் பயணித்துள்ளேன் உங்கள் கட்சியில் இருப்பவர்கள் குறைந்தபட்சம் 40 அல்லது 30 வருடங்கள் அரசியலில் உள்ளனர் ஆனால் வெறும் இரண்டு வருடங்கள் அரசியல் ஞானத்தை கொண்டு அண்ணாமலையை  அரசியலில் ஒரு கத்துக்குட்டி என அழைக்கலாம் , அரசியலில் முதிர்ச்சி இல்லாதவர்கள் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்ல எனக்கு தேவையில்லை என குறிப்பிட்டார். ஏசி ஜனநாயக கூட்டணி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் அங்கம் வைத்தது, தமிழ்நாட்டில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக அங்கம் வைத்தது, எதிர்க்கட்சி என்னும் எனும் அடிப்படையில் குடும்ப ஆதிக்க அரசீயல் நடத்தும் திமுக மீது குற்றச்சாட்டுகள் அளிப்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை


தமிழ்நாட்டில் குடும்ப ஆதிக்கம் செய்து தமிழ்நாட்டை ஊழலில் மூழ்க வைத்து ஊழல் அரசியல் செய்யும் திமுக மீது குற்றச்சாட்டுகளிங்கள் எங்கள் மீது ஏன் பாய்கிறீர்கள் என கேள்வி எழுப்பினார்  அண்ணாமலை என்ன பேயா பிசாசா அவரைப் பார்த்து பயப்படுவதற்கு, எத்தனை வருடங்கள் ஆகவோ அதிமுக கட்சியினை ஒழிப்பதற்கு கலைஞர் கங்கணம் கட்டி அலைந்தார் ஆனால் அதிமுக அதையெல்லாம் தாண்டி ஒரு மிகப்பெரிய இயக்கமாய் உருவெடுத்துள்ளது, இன்றைக்கும் என்றைக்கும் ஒரு வெற்றி நடை போடும் இயக்கமாய் அதிமுக  இருக்கும் என தெரிவித்தார். ஆகையினால் அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் யாரைப் பார்த்தும் பயப்படத் தேவையில்ல. மதுரை காத்த சுந்தரபாண்டியன் போல் நடக்கவிருக்கும் மாநாட்டில்  எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தலைமையில் தமிழ்நாட்டை மீட்டெடுக்கும் நிலை கண்டிப்பாக வரும் என தெரிவித்தார்.

மேலும் படிக்க | எடப்பாடி பதற்றத்தில் உளறுகிறார் - டி.டி.வி.தினகரன்


செயற்குழு கூட்டம் முடிந்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் 

கட்சியில் இத்தனை ஆண்டுகளாக என்னுடைய உழைப்பிற்காக கார் வழங்கி உள்ளார்கள்.இந்த காரில் தமிழகம் முழுவதும் பயணித்து கட்சியை வலுப்படுத்த திட்டமிட்டு இருக்கிறேன் என்று கூறினார்.