பிடிஆர் குற்றச்சாட்டுக்கு அண்ணாமலை பதிலடி...!!

பிடிஆர் குற்றச்சாட்டுக்கு  அண்ணாமலை பதிலடி...!!

அமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் குற்றச்சாட்டுக்கு தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை பதிலளித்துள்ளாா்.

அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் மற்றும் சபரீசன் ஆகிய இருவரும் ஒரே வருடத்தில் 30 ஆயிரம் கோடி ரூபாய் வரை முறைகேடாக சம்பாதித்துள்ளதாக அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் பேசியது போல குரல் பதிவு ஒன்றை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இணையதளத்தில் வெளியிட்டார்.  இது அரசியல் வட்டாரத்தில் மிகுந்த சர்ச்சையைக் கிளப்பியது.

இதற்கு மறுப்பு தொிவித்த அமைச்சா் பழனிவேல் தியாகராஜன், அந்த குரல் பதிவு அனைத்தும் பொய்யான தகவல் என அண்ணாமலைக்கு பதிலளிக்கும் விதமாக  ட்விட்டாில் பதிவிட்டிருந்தாா்.

அமைச்சாின் அந்த பதிவுக்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை நேற்று ட்விட்டாில் பதிலளித்துள்ளாா். அதில், அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் 2 நாட்களாக திமுக தகவல் தொழில் நுட்பப் பிரிவு சமூக வலைதளங்களில் அரைகுறையாகக் கூறிவந்ததை படித்துவிட்டு இந்த அறிக்கையை தயாரித்து வெளியிட்டிருக்கிறார் என தொிவித்துள்ளாா். மேலும், நிதி அமைச்சர் திமுகவின் தகவல் தொழில் நுட்ப பிரிவினர்  உதவியுடன் இந்த குரல் பதிவை போலி என குறிப்பிடுவதாக அவர் கூறியுள்ளார். 

அதைத் தொடர்ந்து, திமுகவின் தகவல் தொழில் நுட்ப பிரிவை சேர்ந்தவர்களைத் தவிர, வேறு யாரும் இந்தத் தற்காப்பு பதிலை நம்ப மாட்டார்கள் என்று குறிப்பிட்ட அவர், குரல் பதிவு குறித்து தடயவியல் ஆய்வு செய்ய வேண்டும் என்றும் கோரியுள்ளார்.