"காவல் துறையை முதலமைச்சர் சுதந்திரமாக செயல்பட அனுமதிக்க வேண்டும்"  அண்ணாமலை!

"காவல் துறையை முதலமைச்சர் சுதந்திரமாக செயல்பட அனுமதிக்க வேண்டும்"  அண்ணாமலை!

தமிழ்நாடு காவல்துறை சுதந்திரமாக செயல்பட முதலமைச்சர் அனுமதிக்க வேண்டும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார். 

ஈரோடு மாவட்டம் சிவகிரி பகுதியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை என் மண் என் மக்கள் நடைபயணம் மேற்கொண்டார். சிவகிரி அரசு மருத்துவமனை அருகே தொடங்கிய நடைபயணம், தியாகி திருப்பூர் குமரன் சிலை முன்பு நிறைவு பெற்றது. 

அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, பாஜக தகவல் தொழில்நுட்ப நிர்வாகிகளை கைது செய்ய முனைப்பு காட்டும் உளவுத்துறை, ஆளுநர் மாளிகை விவகாரத்தில் கோட்டை விட்டுள்ளதாக குற்றம்சாட்டினார். 

மேலும், ஏற்கனவே கமலாலயத்தின் மீதும், தற்போது ஆளுநர் மாளிகை மீதும் கருக்கா வினோத் வெடிகுண்டு வீசியுள்ள நிலையில், அடுத்த குண்டு அவர் வீசாமல் இருக்க கடவுளைத்தான் வேண்டிக் கொள்ள வேண்டும் போல என்று விமர்சித்தார்.

தமிழ்நாடு காவல்துறையை சுதந்திரமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்பட விட்டால் மட்டுமே இத்தகைய நிகழ்வுகளை தடுத்து நிறுத்த முடியும் என்றும் தெரிவித்தார். மேலும், இன்று குடியரசுத் தலைவர் சென்னை வருகை தரவுள்ள நிலையில் குண்டுவெடிப்பு சம்பவம் மக்கள் மத்தியில் பயத்தை விளைவித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.