நீட் தேர்வு: "இன்னொரு உயிர் பறிபோனால் திமுக தான் பொறுப்பு" அண்ணாமலை பேச்சு!!

நீட் தேர்வு: "இன்னொரு உயிர் பறிபோனால் திமுக தான் பொறுப்பு" அண்ணாமலை பேச்சு!!

நீட் தேர்வால் இன்னொரு உயிர் பறிபோனால் அதற்கு திமுக தான் பொறுப்பு என பாஜக மாநில தலைவா் அண்ணாமலை தொிவித்துள்ளாா். 

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை "என் மண், என் மக்கள்" நடைபயணத்தை நேற்று திருச்செந்தூரில் தொடங்கியுள்ளார். அதனை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சாமி தரிசனம் செய்த அவா், தனியார் மண்டபத்தில் வைத்து சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த சுதந்திரப் போராட்ட தியாகிகளின் வாரிசுகள் 21 பேருக்கு கேடயம் வழங்கி கவுரவப்படுத்தியுள்ளார்.

தொடா்ந்து அவா் செய்தியாளா்களை சந்தித்து பேசுகையில், அரசியல்வாதிகள் நீட் தோ்வை வைத்து அரசியல் செய்து வருகிறாா் என்றும், குறிப்பாக திமுக மோசமான அரசியலை செய்து வருகிறது என்றும் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் எந்த கல்விக்கு தகுதித்தேர்வு இல்லை என்று கேள்வி எழுப்பிய அவர், நீட் தோ்வால் இன்னொரு உயிர் பறிபோனால் அதற்கு திமுக தான் காரணம் என தெரிவித்துள்ளார்.

தொடா்ந்து பேசிய அவர், கம்யூனிஸ்ட் கட்சிகள் தனது நிலைப்பாட்டை இழந்துவிட்டதாகவும், மக்களின் உரிமைக்காக போராடிய அவை திமுகவினரின் ஊழல்கள் குறித்து  பேசுவதில்லை என குற்றம்சாட்டியுள்ளார். மேலும் திமுக ஆட்சியில் சாதி மோதல்கள் அதிகரிகத்துள்ளதாக குறிப்பிட்ட அவா், தமிழ்நாட்டில் அரசு பள்ளியை திராவிட அரசு குழி தோண்டி புதைத்து விட்டதாக சாடியுள்ளார்.

நடைபயணத்தில் மக்களின் வரவேற்பு  பிரதமர் மீதான நம்பிக்கையை வெளிப்படுத்துவதாக தொிவித்த அவா், வரும் நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் தேசிய ஜனநாயக கூட்டணி உறுதியாக வெல்லும் என நம்பிக்கை தொிவித்துள்ளார்.