நாளை தி.மு.க அமைச்சர்களின் ஊழல் பட்டியலை கண்டிப்பாக அண்ணாமலை வெளியிடுவார் - பாஜக கருப்பு முருகானந்தம்

நாளை தி.மு.க அமைச்சர்களின் ஊழல் பட்டியலை கண்டிப்பாக அண்ணாமலை வெளியிடுவார் -  பாஜக கருப்பு முருகானந்தம்

தஞ்சையில் பா.ஜ.க. மாநிலத் பொது செயலாளர் கருப்பு முருகானந்தம் செய்தியாளர்  பேட்டியில் நாளை அம்பேத்கர் பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது. இதற்காக தமிழகம் முழுவதும் உள்ள அம்பேத்கர் சிலை மற்றும் அதனை சுற்றியுள்ள இடங்களில் பா.ஜ.க. சார்பில் சுத்தம் செய்யும் பணி நடைபெறும். பின்னர் பா.ஜ.க சார்பில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படும்.

BJP Annamalai tweets that he will release the corruption files of DMK Ministers

நிலக்கரி சுரங்கம் அமைப்பதற்கான இடம் டெல்டா மாவட்டங்களில் கண்டறியப்பட்டு ஏல அறிவிப்பு வெளியிடப்பட்டது. உடனடியாக நாங்கள் மாநில தலைவர் அண்ணாமலையை தொடர்பு கொண்டு நிலக்கரி சுரங்கம் அமைத்தால் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படும் என கூறினோம். உடனடியாக அண்ணாமலை சம்பந்தப்பட்ட மத்திய அமைச்சரை சந்தித்து நிலக்கரி சுரங்கம் அமைக்கும் ஏல அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தார். இதனை தொடர்ந்து டெல்டா பகுதியில் நிலக்கரி சுரங்கம் ஏல அறிவிப்பை மத்திய அரசு திரும்ப பெற்றது. கண்டிப்பாக பாதுகாக்கப்பட்ட டெல்டாவில் நிலக்கரி சுரங்கம் அமையாது. 

அண்ணாமலையை அச்சுறுத்த நினைத்தால் ஒட்டுமொத்தமாக திமுக  அழிக்கப்படும்'‍-சர்ச்சையில் கருப்பு முருகானந்தம்
இந்த சூழ்நிலையில் வருகிற15 ம் தேதி சனிக்கிழமை மாலையில் தஞ்சாவூரில் விவசாய தமிழர் விழிப்புணர்வு நல சங்கம் சார்பில் பா.ஜ.க‌ . மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு நன்றி மற்றும் பாராட்டு விழா நடைபெற உள்ளது ‌‌. இந்த விழாவுக்கான ஏற்பாடுகள் சிறப்பாக நடந்து வருகிறது. இதில் ஏராளமான பொதுமக்கள், விவசாயிகள் கலந்து கொள்வர்.

மேலும் படிக்க | 45 இடங்களில் ஆர்எஸ்எஸ் பேரணி... தமிழ்நாடு காவல்துறை அனுமதி

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நான் டெல்டா மாவட்டக்காரன் என்று கூறுகிறார். ஆனால் டெல்டா மாவட்டத்தில் மீத்தேன் திட்டத்திற்கு கையெழுத்து இட்டவர் அவர்தான்.  தமிழ் புத்தாண்டான நாளை தி.மு.க. அமைச்சர்களின் ஊழல் பட்டியலை கண்டிப்பாக அண்ணாமலை வெளியிடுவார். என தெரிவித்தார்.

டெல்டா மாவட்டத்தில் விவசாயத்தைப் பாதிக்கும் ஆலையை தமிழக அரசு அமைக்காது -  முதல்வர் மு.க.ஸ்டாலின்