அண்ணாமலை மேற்கொண்ட 'என் மண் என் மக்கள்' முதற்கட்ட நடைபயணம் இன்றுடன் நிறைவு!

அண்ணாமலை மேற்கொண்ட 'என் மண் என் மக்கள்' முதற்கட்ட நடைபயணம் இன்றுடன் நிறைவு!

பாஜக மாநில தலைவா் அண்ணாமலையின் "என் மண், என் மக்கள்" முதற்கட்ட நடைபயணம் இன்றுடன் நிறைவடைகிறது.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை "என் மண், என் மக்கள்" நடைபயணத்தை கடந்த மாதம் 28-ம் தேதி ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் தொடங்கினார். தொடர்ந்து ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, தேனி, விருதுநகர், தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் நடைபயணம் மேற்கொண்டாா். அப்போது மத்திய பாஜக அரசின் 9 ஆண்டு கால சாதனைகளை மக்களுக்கு எடுத்துரைத்தார்.

இதையும் படிக்க : "அரசு மருத்துவமனையில் 24 மணி நேரமும் மருத்துவர் இருக்க வேண்டும்" மனித உரிமை ஆணையம் உத்தரவு!

இந்த நிலையில் நெல்லை மாவட்டத்தில் பாளையங்கோட்டையில் 4 நாட்கள் நடைபயணத்தை தொடங்கிய அவர், 2-வது நாளாக வள்ளியூர், களக்காடு பகுதிகளில் நடைபயணம் மேற்கொண்டார். தொடர்ந்து, இன்று மாலை நெல்லை பேட்டை பாறையடி காலனி பகுதியில் தனது நடைபயணத்தை தொடங்கும் அண்ணாமலை, இன்றுடன்  "என் மண், என் மக்கள்” முதல் கட்ட நடைபயணத்தை முடிக்கவுள்ளார்.

இதில் சிறப்பு அழைப்பாளராக மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை மந்திரி பூபேந்திர யாதவ் கலந்து கொள்கிறார். இன்றுடன் முதல் கட்ட நடைபயணத்தை முடித்துக்கொண்டு சென்னை புறப்படும் அண்ணாமலை, தொடர்ந்து 2-ஆம் கட்ட நடைபயணத்தை தென்காசி மாவட்டத்தில் அடுத்த மாதம் 3-ம் தேதி தொடங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.