சென்னை ஐ ஐ டி யில் புதிய துறை தொடக்கம் - காமகோடி அறிவிப்பு

மருத்துவ அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் என்கிற புதிய துறையை இந்தியாவில் முதன்முறையாக தொடங்கி உள்ளது ஐ ஐ டி மெட்ராஸ்

சென்னை ஐ ஐ டி யில் புதிய துறை தொடக்கம் - காமகோடி அறிவிப்பு

சென்னை ஐஐடியில் மருத்துவ அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை என்ற புதிய துறை தொடங்கப்பட்டுள்ளது...இந்த துறையினை ஐஐடி வளாகத்தில் நடைபெற்ற தொடக்க விழாவில் cognizant இணை நிறுவனர் லட்சுமி நாராயணன் மற்றும் ஐஐடி இயக்குனர் காமகோடி ஆகியோர் தொடங்கி வைத்தனர்... மருத்துவ ஆராய்ச்சியை மேம்படுத்த தேவையான திறன்களுடன் விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்கள் தயார்படுத்துவது துறையின் முக்கிய நோக்கம் என தெரிவிக்கப்பட்டுள்ளது

 ஐடி இயக்குனர் காமகோடி செய்தியாளர்களை  சந்திப்பில் :

ஐ ஐ டி வரலாற்றில் முக்கிய தினம்...பொறியியல் மற்றும் மருத்துவத்தை இணைக்க ஒரு பெரிய முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. எந்த மருத்துவமனை சென்றாலும் அறுவை சிகிச்சைக்கு இயந்திரங்களை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்து பயன்படுத்தி வருகிறோம்...அதில் எதவாது கோளாறு என்றால் அதை சரி செய்யும் திறமை மருத்துவர்களிடம் அல்லது வேறு நிபுணர்களிடம் இருப்பதில்லை...மருத்துவத்துறையை பொறியியல் கண்ணோட்டத்துடன் பார்க்க போகிறோம்...நாட்டுக்கு மிகவும் முக்கியம் இது தான் என கூறினார். 

ஜி 20 குறித்து சென்னையில் கருத்தரங்கம் - இயக்குனர் காமகோடி பேட்டி

95 சதவீத எலக்ட்ரானிக் சாதனங்கள் இறக்குமதி தான் செய்யபடுகிறது...இந்தியாவிலேயே மருத்துவ உபகரணங்கள் இயந்திரங்கள் தயாரிக்க வேண்டும், இறக்குமதி செய்வதை தவிர்க்க வேண்டும்... மருத்துவ தொழில் நுட்பம் கொண்ட இயந்திரங்கள் உபகரணங்களை முற்றிலும் இந்தியாவிலேயே நமக்கு நாமே தயாரிக்க வேண்டும்.இதற்கான முதல் படியை ஐ ஐ டியில் எடுத்து உள்ளோம் என்றார். 

மேலும் படிக்க | கல்விக்கொள்கை குழுவிலிருந்து ஜவகர் விலகல் - காரணமான சம்பவங்களுக்கு ஏஐஎஸ்இசி கடும் கண்டணம்

உலகத்திலேயே இரண்டாவதாக இந்தியாவில் முதன்முறையாக பி எஸ் மருத்துவ அறிவியல் மற்றும் பொறியியல் பாடம் ஐஐடி மெட்ராஸில் தொடங்கப்பட்டுள்ளது...12 ஆம் வகுப்பில் இயற்பியல் வேதியல் கணிதம் உயிரியல் படித்த மாணவர்கள் ஜூலை மாதம் நடைபெறும் IISER நுழைவு தேர்வு எழுதி BS படிப்பில் சேரலாம்...முதற் கட்டமாக 30 இடங்கள் மட்டும் ஒதுக்கப்பட்ட உள்ளது... இந்த பாடம் முற்றிலும் நேரடி வகுப்புகள் மட்டுமே நடத்தப்படும் ஆன்லைன் வகுப்புகள் கிடையாது.கணித அறிவியலுக்கு போட்டியாக மருத்துவர் இருக்கும் என்றும் இந்தத் துறையில் நிறைய வேலை வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறினார்.

எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் மருத்துவ படிப்புகளுக்கான அகில இந்திய கலந்தாய்வு  இன்று தொடக்கம் | MBBS, BDS all india medical counselling commence today

எம்பிபிஎஸ் ,பி டி எஸ் ,எம் டி,எம் எஸ் முடித்த மருத்துவர்களுக்கு முனைவர் பட்டம் பெற பாடத்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது..மருத்துவர்கள் அந்த பாடத்திட்டங்களில் சேர்ந்து முனைவர் பட்டங்களை பெற்றுக் கொள்ளலாம் என்றும் கூறினார் ஐ ஐடி இயக்குநர் காமகோடி.