தமிழ்நாட்டில் மேலும் ஒரு லாக்கப் மரணம் - எடப்பாடி பழனிசாமி கண்டனம்.

தமிழ்நாட்டில் மேலும் ஒரு லாக்கப் மரணம் - எடப்பாடி பழனிசாமி கண்டனம்.

தென்காசி மாவட்டம், கடையநல்லூர் தாலுகாவிற்கு உட்பட்ட புளியங்குடி பகுதியில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு மாடசாமி என்பவரது மகனான தங்கசாமி (வயது 26) என்பவரும், அவரது பாட்டியான முப்பிலிமாடசாமி என்பவரும் மது பாட்டில்கள் விற்பனை செய்ததாக கூறி புளியங்குடி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில், சிறையில் அடைக்கப்பட்ட தங்கசாமி மாரடைப்பு காரணமாக  உயிரிழந்த நிலையில், தங்கசாமியை போலீசார் கடுமையாக தாக்கி சிறையில் அடைத்ததால் தான் அவர் உயிரிழந்ததாக கூறி அவரது உறவினர்கள் புளியங்குடி பேருந்து நிலையம் எதிரே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இவ்வாறிருக்க, மருத்துவர்கள் அளித்த  பிரேதப் பரிசோதனை அறிக்கையில் ஒரு இடத்தில் கூட மாரடைப்பு மூலம்,  இறப்பு என்றோமூச்சுத் திறனல் மூலம் மரணம் என்றோ இல்லையென தங்கசாமியின் உறவினர்களின் வழக்கறிஞர் தெரிவித்தார்.   இதனால் தங்கசாமியின் மரணம் காவல் துறையினர் தாக்கியதன் காரணமாகவே நடந்துள்ளதாக உறவினர்கள் குற்றச்சாட்டை முன் முன்வைத்தனர்.

 

எனவே தங்கசாமியின் இறப்பிற்கு காரணமான காவலர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்;  தங்கசாமியின் சகோதரருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மர்மமான முறையில் சிறையில் உயிரிழந்த தங்கசாமியின் உடலைஅவருடைய உறவினர்கள் வாங்க மறுத்து வருகின்றனர்.  இச்சம்பவத்தால் புளியங்குடி பகுதி முழுவதும் பதட்டமான சூழல் நிலவி வருகிறது இதனால் புளியங்குடி நகர் முழுவதும் ஆங்காங்கே காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இன்னிலையில், இதுகுறித்து    திமுக அரசுக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென்காசி மாவட்டம் புளியங்குடியை சேர்ந்த தங்கசாமி மற்றும் அவரது பாட்டியுடன் மதுபானம் விற்றதாக புளியங்குடி காவல்துறையினரால் கடந்த 11-ம் தேதி அன்று கைது செய்யப்பட்டு 16-ம் தேதியன்று பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார் என குறிப்பிட்டுள்ளார். மேலும், தங்கசாமியின் மரணத்திற்கு காரணமானவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தமிழ்நாடு அரசுக்கு அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதையும் படிக்க     | மாநகராட்சி ஆணையர் வீட்டில் ரெய்டு...யார் இந்த மகேஸ்வரி?