மேலும் ஒரு மாணவர் தூக்கிட்டு தற்கொலை...! 2 வாரங்களில் 5- வது வழக்கு...!

காரைக்குடியில் 12 ம் வகுப்பு படித்து வந்த மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்த்தியுள்ளது.

மேலும் ஒரு  மாணவர் தூக்கிட்டு தற்கொலை...! 2 வாரங்களில்  5- வது வழக்கு...!

12 வகுப்பு மாணவர் :

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே சாக்கோட்டை மேலரதவீதியை சேர்ந்தவர் சுடர்ராஜ் - மேகலா தம்பதியினர். சாக்கு வியாபாரம் செய்து வரும் இவர்களது 17 வயது மகன் செல்வக்குமார் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 12ம் வகுப்பில் பயோ - கணித பிரிவு எடுத்து படித்து வந்தார். அவர் படித்து பெரிய ஆளாக வர வேண்டும் என்று பெற்றோர் ஆசைப்பட்டுள்ளனர். கொரானா கட்டுப்பாடுகளால், செல்வக்குமாரால் ஆன்லைனில் படித்து வந்த அவரால், நேரடி பள்ளிப்படிப்பில் கவனம் செலுத்த முடியவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் செல்வகுமார் மன வருத்தத்தில் இருந்துள்ளார்.  

சந்தேகத்தில் அக்கம் பக்கத்தினர் :

நேற்று காலை சுடர்ராஜ் மற்றும் அவரது மனைவியுடன் திருச்செந்தூர் அருகே உள்ள அவரது குல தெய்வ கோவிலுக்குச் சென்றுள்ளனர். நேற்று பள்ளிக்கு  சென்று வீடு திரும்பிய செல்வக்குமார், வீட்டை விட்டு வெளியே வரவில்லை என கூறப்படுகிறது. அக்கம் பக்கத்தினர் சந்தேகமடைந்த நிலையில், இரவு 11 மணியளவில்  செல்வக்குமாரின் வீட்டை தட்டிப்பார்த்துள்ளனர்.

தூக்கிட்டு தற்கொலை :

இதனால் மீண்டும் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர், கதவை உடைத்து பார்த்த போது, செல்வக்குமார் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. பின்னர், அவரது பெற்றோருக்கு அக்கம்பக்கத்தினர் தகவல் தெரிவித்ததன் அடிப்படையில் பெற்றோர் சாக்கோட்டை காவல் நிலையத்தில்  புகார் அளித்தனர். அதன் அடிப்படையில் சாக்கோட்டை போலீசார் உடலை கைப்பற்றி விசாரானை நடத்தி வருகின்றனர்.

கடிதம் எழுதிய மாணவன் :

மாணவன் செல்வக்குமார் இறப்பதற்கு முன்பு, ‘‘நான் நல்ல முறையில் படித்து பெரிய ஆளாக வர வேண்டும் என்ற உங்கள் ஆசையை என்னால் நிறைவேற்ற முடியவில்லை. என்னை மன்னித்து விடுங்கள். என் சாவுக்கு யாரும் காரணம் இல்லை." என கடிதம் எழுதி விட்டு இறந்துள்தாக கூறப்படுகிறது.

காரைக்குடி டிஎஸ்பி : 

இதுகுறித்து காரைக்குடி டிஎஸ்பி வினோஜ், சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே 12ம் வகுப்பு மாணவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறோம். அவரது பிரேத பரிசோதனை முடிந்து, மாணவரின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது என கூறியுள்ளார். 

2 வாரங்களில் நடத்த தற்கொலை : 

தமிழகத்தில் கடந்த இரண்டு வாரங்களில் மட்டும், 12-ஆம் வகுப்பு படிக்கும் 3 மாணவிகளும், 11-ஆம் வகுப்பு படிக்கும் மற்றொரு மாணவியும் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படும் நிலையில், இது ஐந்தாவது வழக்கு என்பது குறிப்பிடத்தக்கது.