நீட் தேர்வு எழுதிய மேலும் ஒரு மாணவி தற்கொலை முயற்சி!

செங்கல்பட்டு அருகே நீட் தேர்வு எழுதிய மேலும் ஒரு மாணவி தீக்குளித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நீட் தேர்வு எழுதிய மேலும் ஒரு மாணவி தற்கொலை முயற்சி!

செங்கல்பட்டு அருகே நீட் தேர்வு எழுதிய மேலும் ஒரு மாணவி தீக்குளித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கம் அய்யஞ்சேரி பகுதியைச் சேர்ந்தவர் கமலநாதன். ஆசிரியராக பணியாற்றி வரும் இவரின் மகள் அனுசியா கடந்த 12ஆம் தேதி நடைபெற்ற இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வை எழுதியிருந்தார். மருத்துவர் ஆக வேண்டும் என்ற கனவோடு நீட் தேர்வு எழுதிய மாணவி, தேர்வை சரியாக எழுதவில்லை என்ற மன உளைச்சலோடு இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், இன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தேர்வில் தோல்வி அடைந்துவிடுமோ என்று எண்ணி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

40 சதவீத தீக்காயங்களுடன் மாணவி மீட்கப்பட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த ஊரக தொழில்துறை அமைச்சர் தா.மோ அன்பரசன் மாணவியின் பெற்றோரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். முன்னதாக நீட் தேர்வு அச்சத்தினால் சேலத்தைச் சேர்ந்த தனுஷ், அரியலூரைச் சேர்ந்த கனிமொழி, வேலூரைச் சேர்ந்த சௌந்தர்யா என அடுத்தடுத்து 4 நாட்களுக்குள் 3 மாணாக்கர்கள் தற்கொலை செய்து கொண்ட நிலையில், தற்போது மேலும் ஒரு மாணவி தற்கொலைக்கு முயன்றுள்ள சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது.