பொள்ளாச்சி பாலியல் வழக்கை விசாரித்த டி.எஸ்.பி ஜெயராமனின் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை...

பொள்ளாச்சி பாலியல் வழக்கை விசாரித்த  டி.எஸ்.பி ஜெயராமனின் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

பொள்ளாச்சி பாலியல் வழக்கை விசாரித்த டி.எஸ்.பி ஜெயராமனின் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை...

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் இளம்பெண்களை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கி, அதனை வீடியோ பதிவு செய்து இளைஞர்கள் சிலர் மிரட்டிய சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரை  வெளியிட்டதற்காகவும், பொள்ளாச்சி பாலியல் வழக்கில் உரிய விசாரணை நடத்தவில்லை என்பதற்காகவும் பொள்ளாச்சி டிஎஸ்பி ஜெயராமன் உள்ளிட்ட சிலர் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். 

இந்த ஜெயராமன்  கடந்த 1998ம் ஆண்டு சார்பு ஆய்வாளராக திண்டுக்கல் சாமிநாதபுரம் காவல் நிலையத்தில் பணியில் சேர்ந்தவர். அதுமுதல் பல்வேறு இடங்களில் ஆய்வாளராக பணியாற்றி  பதவி உயர்வு பெற்று தாராபுரம் திருநெல்வேலி, பொள்ளாச்சி, ஆகிய இடங்களில் டி.எஸ். பியாக  பணியாற்றினார்.  

தற்பொழுது தூத்துக்குடி  மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பியாக  பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இன்று திண்டுக்கல் அசோக் நகரில் உள்ள அவரது வீட்டில் காலை முதல் லஞ்ச ஒழிப்பு துறை டிஎஸ்பி நாகராஜ், ரூபா கீதாராணி ஆகியோர் தலைமையிலான போலீசார் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.