துறைமுகங்களில் சுற்றுலா முனையங்கள் அமைக்க ஏற்பாடு..!

துறைமுகங்களில் சுற்றுலா முனையங்கள் அமைக்க ஏற்பாடு..!

நாட்டில் உள்ள அனைத்து துறைமுகங்களிலும் சுற்றுலா முனையங்களை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக மத்திய அரசின் துறைமுகம் மற்றும் நீர் போக்குவரத்து துறை செயலாளர் டி.கே.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

கடந்த 1976 ஆம் ஆண்டு முதல் நாட்டில் உள்ள பெரிய துறைமுகங்களில் ஒன்றாக செயல்பட்டுவரும் தூத்துக்குடி துறைமுகம் பல மில்லியன் சரக்குகளை கையாண்டு நூற்றுக்கணக்கான கோடிரூபாய் வருவாய் ஈட்டிவருகிறது.  

தென்தமிழகத்தின் வளர்ச்சியில் ஒரு முக்கிய மையமாக திகழ்ந்து வரும் இத்துறைமுகத்தின் புதிய இலச்சினை வடிவமைக்கப்பட்டது. இதனை மத்திய அரசின் துறைமுகங்கள் மற்றும் நீர்போக்குவரத்து துறை செயலாளர் டி.கே.ராமச்சந்திரன் இன்று வெளியிட்டார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்.. நாட்டின் தீபகற்பத்தின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள தூத்துக்குடியில் முத்துகுளியல் சிறப்பாக நடைபெற்றதையும் குறிப்பிடும் வகையில் முத்து அமைக்கப்பட்டு அதன்மீது வி.ஓ. சி என்ற மூன்று எழுத்துக்களையும் குறிப்பிடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த புதியஇலட்சினை மூலமாக உலகின் முக்கிய துறைமுகங்களில் ஒன்றாக இத்துறைமுகம் மாறுவதற்கு இதுமுதற்படியாகும் என்றார். நாட்டில் சாகர் மாலா திட்டத்தில் ஐந்தரை லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன. தற்போது தூத்துக்குடி துறைமுகம் உட்பட அனைத்து துறைமுகம் ஐந்தாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பணிகள் நடைபெற்று வருகிறது”,   என்றுகூறினார்.

தூத்துக்குடி துறைமுகத்தில் 7000 கோடி ரூபாய் மதிப்பில் வழி துறைமுகம் வளர்ச்சி திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும்.  அந்தத் திட்டம் முடிவடையும் போது துறைமுகம் சரக்கு பெட்டைமுனையமாக மாறும்என்றார்.

மேலும்நாட்டில்கொச்சி, மும்பை,கோவா, விசாகப்பட்டினம் உள்ளிட்ட எல்லா துறைகளிலும் சுற்றுலா முனையம் ஒன்று அமைக்க வழிவகை செய்யப்பட்டு வருகிறது. நமது நாட்டில் உள்ள கடல், ஆறுகளை சர்வதேச நாடுளுடன் இணைக்கும் வகையில் சுற்றுலா நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.

இதையும் படிக்க   | கொடநாடு வழக்கு; அறிக்கை தாக்கல் செய்ய போலீசுக்கு செப்21 வரை அவகாசம்!