பொது இடத்தில் மோதிக்கொள்ளும் மாணவர்கள் மீது கைது நடவடிக்கை பாயும்: காவல்துறை எச்சரிக்கை

பொது இடத்தில் மோதிக்கொள்ளும் மாணவர்கள் மீது கைது நடவடிக்கை பாயும் என சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் எச்சரித்துள்ளார்.

பொது இடத்தில் மோதிக்கொள்ளும் மாணவர்கள் மீது கைது நடவடிக்கை பாயும்: காவல்துறை எச்சரிக்கை

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனை கூறினார். மேலும் அவர்களை கண்காணிக்க தனிப்படையும் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். கடந்த ஒரு மாதத்தில், சென்னை மத்திய குற்றப்பிரிவில் 184 புள்ளி 4 கோடி ரூபாய் வரையிலான பொருட்கள் முடக்கப்பட்டுள்ளதாகவும், இதில் 122. 63 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டு விட்டதாகவும் தெரிவித்தார். தனியார் கண் மருத்துவமனையில் சிம் சுவப் முறையில் நூதனமாக  24 லட்சம் ரூபாய் மோசடி செய்த மேற்கு வங்க கும்பல்லை சேர்ந்த 4 பேரை கைது செய்துள்ளதாகவும் சங்கர் ஜிவால்  கூறினார்.