"கனிமொழி மீது அவதூறு பரப்பிய நபர்களை கைது செய்க" - திமுக வழக்குரைஞர் காசிராஜன் .

"கனிமொழி மீது அவதூறு பரப்பிய நபர்களை கைது செய்க" - திமுக வழக்குரைஞர்  காசிராஜன் .

மணிப்பூரில் பாஜகவினர் பெண்கள் மீது வன்முறை செயல்களில் ஈடுபட்டது போல தமிழ்நாட்டில் அதிமுகவினர் செயல்படுவதாக திமுக வழக்கறிஞர் காசிராஜன் குற்றம்சாட்டியுள்ளார். 

மதுரை அதிமுக மாநாட்டில் திமுக எம்.பி. கனிமொழியை அவதூறாக பேசிய நபர்கள் மற்றும்  தூண்டுதலாக இருந்த முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழக்கறிஞர் காசிராஜன்  தலைமையில் சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். 

அதிமுக மாநாட்டில்   கனிமொழியை அவதூறாக பேசிய நபர்கள் மற்றும்  தூண்டுதலாக இருந்த முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அமைச்சர் செல்லூர் ராஜு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இன்று வழக்கறிஞர் காசிராஜன்  தலைமையில் சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தனர் 

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த வழக்கறிஞர் காசிராஜன் கூறியதாவது:- 

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பாக மதுரை நடைபெற்ற ஆஇஅதிமுக மாநாட்டில் மதிப்பிற்குரிய கனிமொழி கருணாநிதி அவர்களை அவதூறாக பேச வேண்டும் என்ற எண்ணத்தில் எடப்பாடி அவர்களின் தூண்டுதலின் பேரில் மேடையில் பெண் என்று பார்க்காமல் அவதூறு  பேசியவர் மீதும் எடப்பாடி பழனிசாமியின் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் கொடுத்துள்ளோம். புகார் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படுவதாக காவல் ஆணையர் கூறியுள்ளார்

மணிப்பூரில் அவர்களது கூட்டணி கட்சிகள் பெண்களின் பெண்களுக்கு எதிரான வன்முறையை தொடுக்கும்போது அதே கூட்டணியில் இருக்கக்கூடிய ஆஇஅதிமுகவும் பெண்கள் என்று பாராமல் பொதுவெளியில் நாகரீகம் அற்ற முறையில் பேசுவதை அவர்கள் வரவேற்று இருக்கிறார்கள்.

இதற்கு அவர்கள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மக்கள் நிச்சயமாக அதற்குண்டான பாடத்தினை போற்றுவார் எனவும் கூறினார் காசிராஜன் வழக்கறிஞர்.

இதையும் படிக்க  | மதுரையில் முக்கிய புள்ளியை களமிறக்க பாஜக திட்டம்?