கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டம்..  வழிக்காட்டுதல்களை வெளியிட்டது தமிழக அரசு...

கலைஞர் நகர்புற மேம்பாட்டுத் திட்டத்திற்கான வழிக்காட்டுதல்களை வெளியிட்டது தமிழக அரசு.

கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டம்..  வழிக்காட்டுதல்களை வெளியிட்டது தமிழக அரசு...

தமிழக சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கையில் அறிவித்த வண்ணம், அனைத்து நகராட்சிகள், பேரூராட்சிகளில் ரூ.1000 கோடி மதிப்பீட்டில் சமுதாயக்கூடங்கள், சந்தைகள், நவீன நூலகங்கள் போன்ற அடிப்படை கட்டமைப்பு வசதிகளுடன் "கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டம்" என்ற புதிய திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டது.

அதற்கான வழிக்காட்டுதல்களை வெளியிட்டு தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன் படி, இந்த திட்டத்தை செயல்படுத்தி கண்காணிக்க 5 பேர் கொண்ட குழுவை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மை செயலாளர் தலைவராகவும், நிதித்துறை கூடுதல் தலைமை செயலாளர், நகராட்சி நிர்வாக ஆணையர், நகர பஞ்சாயத்து ஆணையர்/இயக்குனர் உறுப்பினர்களாகவும், தமிழ்நாடு நகர்ப்புற நிதி மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகத்தின் நிர்வாக இயக்குனர் ஒருங்கிணைப்பாளராகவும் செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு சென்னையில் 2 வார்டு, 14 மாநகராட்சிகளில் 14 வார்டுகள், 7 நகராட்சி, 37 பேரூராட்சிகளில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.