ஆளவந்தார் நிலத்தில் கலைஞர் பன்னாட்டு அரங்கமா?

ஆயிரம் காணி ஆளவந்தார் நிலத்தில் கலைஞர் நூற்றாண்டு நினைவு பன்னாட்டு அரங்கம் அமைக்கும் முயற்சியை உடனடியாக கைவிட வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். 

தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்ட கலைஞர் நூற்றாண்டு நினைவு பன்னாட்டு அரங்கம் அமைக்கும் முயற்சியை கைவிட வேண்டும் என்பதை வலியுறுத்தி பாமக நிறுவனர் ராமதாசு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இதையும் படிக்க : சாலையில் கொளுந்து விட்டு எரிந்த ஆம்னி பேருந்து...அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்!

அவர்  வெளியிட்டுள்ள அறிக்கையில், செங்கல்பட்டு மாவட்டம் நெம்மேலியில் வன்னிய குலத்தில் பிறந்த ஆளவந்தார் நாயகர் இறைபணிக்காக வழங்கிய நிலங்கள் இறைபணிக்கான தேவையை விட பல மடங்கு அதிகம் என்பதால் அவற்றை கல்வி பணிக்காக பயன்படுத்தலாம் என்ற சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பைக் குறிப்பிட்டு, இதற்கு எதிரான செயல்பாடுகளை அனுமதிக்க முடியாது என்று கூறியுள்ளார். 

எனவே, முட்டுக்காடு கிராமத்தில் ஆளவந்தார் அறக்கட்டளைக்கு சொந்தமான நிலத்தில் பன்னாட்டு அரங்கம் அமைக்கும் திட்டத்தை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.