” அண்ணாமலை இருக்கும் வரை தமிழகத்தில் பாஜக -க்கு ஒரு சீட்டு கூட கிடைக்காது” - எஸ். வி. சேகர்.

” அண்ணாமலை இருக்கும் வரை தமிழகத்தில் பாஜக -க்கு ஒரு சீட்டு கூட கிடைக்காது” - எஸ். வி. சேகர்.

தமிழ்நாட்டில் அதிமுக கூட்டணி தான் பாஜகவிற்கு பலம் என்பதை அண்ணாமலை புரிந்து கொள்ள வேண்டும் என்று பாஜக பிரமுகரும் திரைப்பட நடிகருமான எஸ்,.வி.சேகர் கூறியுள்ளார். 

காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர்:- 

திரைப்பட நடிகரும்,பாஜக பிரமுகருமான எஸ்வி. சேகர்  வழக்குகளை தீர்த்துவைக்கும் திருத்தலமாக பிரசித்தி பெற்று விளங்கும் காஞ்சிபுரம் வழக்கறுத்தீஸ்வரர் கோவிலுக்கு வருகைதந்து சுவாமி தரிசனம் செய்து பிரார்த்தனை மேற்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த எஸ்வி. சேகர்:-

ஒவ்வொரு முறையும் நம்பிக்கை இல்லாத தீர்மானம் வரும் பொழுது மோடி அரசை குறை சொல்லணும்னு எதிர்க்கட்சிகள் எல்லாம் ஒன்றுசேர்ந்து,..” அந்த ஒன்று சேர்ந்திருக்கிற வார்த்தையே பெரிய கேள்விகுறி ”,..  இன்னவரைக்கும் எதிர்க்கட்சிகள் எல்லாரும் ஒருமித்த கருத்தில் ஒன்று சேரவே இல்லை அவர்கள் வந்து அவர்கள் குறைகளை பாராளுமன்ற புத்தகத்தில் பதிவு செய்ய வேண்டும் என்று செய்கிறார்கள். 

எண்ணிக்கையின் மூலமாகவும் மோடி அவர்கள் இன்று பதில்சொல்லப்போகிறார்கள். பிறகுபார்த்தால் மக்கள் மக்களுடைய நம்பிக்கையிலும் அவர்தான் வெற்றி பெறுவார். இந்த நம்பிக்கை இல்லாதீர்மானம் இந்த முறையும் மிகப்பெரிய தோல்வியைதான் அடையும்.

தமிழ்நாடு பாஜக தலைமை சரியான நிலைமையில் இல்லை என்றால் எல்லாம் கீழே ஆடத்தான் செய்யும். அதை ஒன்றும் செய்ய முடியாது. தலைக்கு நடைபயணம் போகவே (பஸ்ஸில்)  நேரமில்லை, அப்படிப்பட்ட நடைபயணத்தையே பஸ்ஸில் சென்று கொண்டிருக்கிறார்.

ஒருநாளைக்கு இரண்டு கிலோ மீட்டர் மூன்று கிலோ மீட்டர் நடக்கிறார். அதுவே அவருக்கு முடியவில்லை, சிங்கம் என்று அவரே சொல்கிறார். ஆனால் நடப்பதை எல்லாம் பார்த்தால் ஏதோ கிழசிங்கம் ஆன மாதிரி தெரிகிறது” என்று விமர்சித்தார். 

”அதனால் இந்த நடைபயணத்தினால் ஒன்றும் நடக்காது, அண்ணாமலை என்பது அரசியல் பூஜ்ஜியம், தமிழ்நாட்டில் பொருத்தவரைக்கும் பாஜகவில் குறைந்தது பத்து வருடம் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக மேலே வந்தால்தான் பாஜகவுடைய கொள்கையே தெரிய வரும்”,  என்றும் கூறினார். 

எதுவுமே தெரியாமல் படக்கென்று யாரோ ஒருவரை சந்தோஷப்படுத்தி, அந்த நபர் இவரை சந்தோஷப்படுத்தி, திடுக்கென்று இந்தபதவியைகொடுத்திருக்கிறார்கள். இதனால் பாஜகவுக்கு தான் நஷ்டம் ஏற்படுமே தவிர, அண்ணாமலைக்கு பெரிய லாபம் ஏற்படக்கூடிய வாய்ப்பு இருக்கிறது.

டெல்லியில் ஆட்சிக்கு பாஜக வரும்,  தமிழ்நாட்டினுடைய உதவியே இருக்காது.
அண்ணாமலை இருக்கின்ற வரையில், தமிழ்நாட்டில் பிஜேபி ஒருசீட்டு கூட பெறாது. வாய்ப்பே கிடையாது. ஏனென்றால் அண்ணாமலையை பொருத்தவரைக்கும் அதிமுக கூட்டணி வரக்கூடாது என்பது மாதிரியே அவர் பேசிவருகிறார்.

அதிமுக கூட்டணிதான் பாஜகவிற்கு தமிழ்நாட்டில் பலம்;  அந்த பலத்தை புரிந்துகொள்ளவேண்டும்;  இவர் நமது நண்பர் என்று சொல்லிக்கொண்டு  அவர்மீது காரி காரி துப்பிக்கொண்டிருந்தால் எப்படி நட்பு இருக்கும்? என கேள்வி எழுப்பினார்.  

அண்ணாமலை இருக்கிறவரைக்கும் அதிமுகவினுடைய ஒரு ஓட்டு கூட பாஜக பக்கம் விழாது. பாஜகவில் இருப்பவர்கள் மோடிக்காகவும் அமித்ஷாக்காகவும் அவர்கள் அந்த கூட்டணி தர்மத்தை மதித்தாலும்,... 

ஆனால், என்றைக்கு அண்ணாமலை ஜெயலலிதா அவர்களை பற்றி தவறாக பேசினாரோ அதையெல்லாம் அதிமுகதொண்டர்கள்,.. அடிமட்டதொண்டர்கள் கூட அண்ணாமலையை மன்னிக்க தயாராக இல்லை”, என்றும் கூறினார். 

தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த்துடனான பந்தத்தை பற்றியும் கூறினார். அப்போது, 

” சூப்பர் ஸ்டார் பட்டமே தமிழ்நாட்டில் முதல்முதலில் தியாகராஜபாகவதருக்குதான் இருந்தது. அவர் கோபித்துக்கொண்டாரா, இப்போது ரஜினி கோபித்துக்கொள்கிறாரா,

ரஜினி இதற்கெல்லாம் அப்பாற்பட்டவர், ரஜினியை பொறுத்தவரைக்கும் ரஜினியுடைய குரலை முதல்முதலாக அபூர்வராகங்களின்போது படரிலீசுக்கு முன்னாடி என்னுடைய ஸ்கூட்டரில் அழைத்துக் கொண்டுவந்து ரெக்கார்டிங் ஸ்டுடியோவில் வாய்ஸ் ரெக்கார்ட் செய்து ஆல் இந்தியா ரேடியோவில் போட்ட அன்றிலிருந்து ரஜினி எனக்கு பழக்கம். 

ரஜினியை வைத்து மற்றவர்கள் பேசுகிறார்களே,தவிர ரஜினி அதை பெரிதாக எடுத்துக்கொள்வது கிடையாது.  அவர் என்றைக்கு என்னுடைய படம் சரியாகபோகவில்லையோ அன்றைக்கு விலகிக் கொள்கிறேன்”, என்கிறார்.

அடுத்தது சூப்பர் ஸ்டார் யார் என்பது குறித்து அடுத்தது விஜய் தான் கவலைப்பட வேண்டும், ரஜினி ஏன் கவலைப்பட வேண்டும்.  

நமக்குஅடுத்தது தானே, அதனால ரஜினியை பொருத்தவரையில் ரஜினி இந்த மாதிரியான சின்ன விஷயங்களுக்கெல்லாம் போகக்கூடியவர் அல்ல, நாளைக்கு விஜய்யை பார்த்தால் ’ஆல் தி பெஸ்ட் விஜய்’  நீ அந்த பட்டத்தை பெறுவதற்கு தகுதியானவர்” என்று  அவரே சொல்லக்கூடியவர்.  அப்படிப்பட்ட குணாதிசயம் கொண்டவர்தான் ரஜினி”,  என எஸ்வி.சேகர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இதையும் படிக்க |  ” பாஜக இஸ்லாமியர்களுக்கு எதிரான கட்சி போல சித்தரிக்கப்படுகிறது ” - அண்ணாமலை.