தேர்தல் அறிக்கையில் கூறியதுபடி பணி நிரந்தரம் வழங்க வேண்டும்..! இல்லையேல் முற்றுகை போராட்டம்.." - செவிலியர் சங்கம் எச்சரிக்கை.

தேர்தல் அறிக்கையில் கூறியதுபடி பணி நிரந்தரம் வழங்க வேண்டும்..!  இல்லையேல் முற்றுகை போராட்டம்.." - செவிலியர் சங்கம் எச்சரிக்கை.

தேர்தல் அறிக்கையில் கூறியதுபடி ஒப்பந்த செவிலியர்களை பணி நிரந்தரம் செய்யவில்லை என்றால் முற்றுகைப்போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தமிழ்நாடு எம்ஆர்பி செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம் எச்சரித்துள்ளது. 

சென்னை திருவல்லிகேணியில்  உள்ள தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க அலுவலகத்தில் தமிழ்நாடு எம்ஆர்பி செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம் திமுக தேர்தல் அறிக்கையில் கூறியபடி ஒப்பந்த செவிலியர்களுக்கு நிரந்தர வேலை அமைத்து தர வேண்டும் என தெரிவித்தனர். மேலும் இதனை நிறைவேற்ற  தவறினால்  முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக எச்சரித்தனர்.

சென்னை திருவல்லிகேணியில் உள்ள தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க அலுவலகத்தில் தமிழ்நாடு எம்ஆர்பி செவிலியர்கள் மேம்பாட்டு சங்கத்தின் பொதுச்செயலாளர் சுபின் பத்திரிகையாளர் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ஒப்பந்த செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என திமுக தேர்தல் அறிக்கையில்  கூறியதை நிறைவேற்ற வேண்டும் என தெரிவித்தார்.

தமிழகம் முழுவதும்  ஆரம்ப சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு நிலைகளில் 8 ஆயிரம் ஒப்பந்த செவிலியர்கள் பணிப்புரிவதாக கூறிய அவர், ஒப்பந்த செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என தெரிவித்தார். நான்கு செவிலியர்கள் பணி புரிய வேண்டிய இடத்தில் ஒருவர் மட்டுமே பணிப்புரிவதால் பணி சுமை அதிகமாக இருப்பதாகவும் , ஒப்பந்த செவிலியர்களுக்கு மகப்பேறு விடுமுறை வழங்க வேண்டும் என கூறினார். 

மேலும், தங்கள் கோரிக்கைகள் நிறைவேறாத பட்சத்தில் வருகிற ஆகஸ்டு மாதம் 23 ஆம் தேதி தேனாம்பேட்டையில் உள்ள மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குனரகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக எச்சரித்தார்.

இதையும் படிக்க    |  பெயரளவில் மட்டுமே இல்லத்தரசிகளான பெண்களுக்கு,.. மகுடம் சூட்டும் அங்கீகாரம் தான் இந்த தீர்ப்பு....!