இரண்டு நாட்கள் நடக்கிறது சட்டசபை கூட்டம் : இரண்டு நாட்களும் கேள்வி நேரம் உண்டு

தமிழக சட்டசபை கூட்டத் தொடரில்,  ஆளுனர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது இன்று விவாதம் நடைபெற உள்ளது.

இரண்டு நாட்கள் நடக்கிறது சட்டசபை கூட்டம் : இரண்டு நாட்களும் கேள்வி நேரம் உண்டு

தமிழ க சட்டசபை கூட்டம் நேற்று துவங் கியது. முதல் நாளான நேற்று, ஆளுனர் ஆர்.என்.ரவி உரையாற்றினார். கூட்டம் முடிந்த பின், சட்டசபை கூட்டத்தை எத்தனை நாட் கள் நடத்துவது என்பதை முடிவு செய்ய, சபாநாய கர் அப்பாவு தலைமையில், அலுவல் ஆய்வு க் கூட்டம் நடைபெற்றது.

அதன்பின், சபாநாய கர் அப்பாவு அளித்த பேட்டியில், சட்டசபை கூட்டத்தை இரண்டு நாட் கள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதா கவும், இன்று ஆளுனர் உரை க் கு நன்றி தெரிவி க் கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெற உள்ளதா கவும் குறிப்பிட்டார். முதலமைச்சர் மு. க.ஸ்டாலின்பதிலுரையுடன்  சட்டசபை கூட்டம் நாளை நிறைவடையும் என தெரிவித்துள்ள அவர், இரண்டு நாட் களும் கேள்வி நேரம் உண்டு என்றும், சோதனை முயற்சியா க, வினா க் கள் - விடை மற்றும் முதல்வர் பதிலுரையை, நேரடி ஒளிபரப்பு செய்ய நடவடி க் கை எடு க் கப்பட்டு வரு கிறது எனவும் தெரிவித்தார்.

சட்டசபை நி கழ்ச்சி களை நேரடியா க ஒளிபரப்ப வேண்டும் என்பது தான் நோ க் கம் என குறிப்பிட்ட சபாநாய கர், கொரோனா பாதிப்பு இருப்பதால், சட்டசபையை இரண்டு நாட் களில் முடி க் க முடிவு செய்யப்பட்டதா கவும், கொரோனாவால் பாதி க் கப்பட்ட எம்.எல்.ஏ., க் கள் விரைவா குணமடைய வேண்டும் என்றும் தெரிவித்து கொண்டார்.