வளிமண்டல கீழடுக்கு சுழற்சி; சென்னையில் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை....!

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி;  சென்னையில் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை....!

தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக  தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதி ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்தது.

இதனையடுத்து சென்னை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய இருப்பதாக என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

இந்நிலையில் திடீரென சென்னையில் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை  பெய்தது. குறிப்பாக சென்னை எழும்பூர்,ராயப்பேட்டை, அசோக் நகர், கேகே நகர், எழும்பூர், சேப்பாக்கம் தேனாம்பேட்டை, அண்ணா சாலை அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது.

காலையில் வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் நள்ளிரவு நேரத்தில் மழை பெய்வதால் குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. திடீரென மழை பெய்வதால் இருசக்கர வாகன ஓட்டிகள் மழையில் நனைந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளதால் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர்.

இதையும் படிக்க  | 20 சுங்கச்சாவடிகளில் செப்.1 முதல் கட்டணம் உயர்வு!