தொடரும் அட்டூழியம்.. தமிழக மீனவர்கள் 12 பேரை கைது செய்த இலங்கை கடற்படை!!

தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த மீனவர்கள் 12 பேரை எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

தொடரும் அட்டூழியம்.. தமிழக மீனவர்கள் 12 பேரை கைது செய்த இலங்கை கடற்படை!!

தமிழக மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடிப்பதாகக் கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்வதும், மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துவதும் தொடர் கதையாகி வருகிறது.

இந்நிலையில் புதுச்சேரி, காசாக்குடி மேடு கிராமத்தை சேர்ந்த வைத்தியநாதன் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில், காரைக்கால் மற்றும் மயிலாடுதுறையை சேர்ந்த மீனவர்கள், கடந்த 30-ஆம் தேதி காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர்.

கோடியக்கரைக்கு தென் கிழக்கே அவர்கள் மீன் பிடித்து கொண்டிருந்தபோது.. அவர்களை சுற்றி வளைத்த இலங்கை கடற்படையினர், படகில் இருந்த கீழக்காசாக்குடிமேடு சேர்ந்த கணேசன், காரைக்கால் மேடு பகுதியை சேர்ந்த பிரேம்குமார், மயிலாடுதுறையை சேர்ந்த தினேஷ், வீரா உள்ளிட்ட 12 மீனவர்களை கைது செய்ததுடன், விசைப்படகையும் பறிமுதல் செய்துள்ளனர்.

மீனவர்கள் 12 பேரும் விசாரணைக்காக இலங்கை பருத்தித்துறை துறைமுகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.  இந்நிலையில், சிறைப் பிடிக்கப்பட்ட மீனவர்களை மீட்டுத் தருமாறு  காரைக்கால் மாவட்ட ஆட்சியர், மற்றும் மீன் வளத்துறை அதிகாரிகளிடம் அவர்களது உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.