பொங்கல் தொகுப்பு வழங்கிய பெண் ஊராட்சிமன்றத் தலைவர் மீது தாக்குதல்!!

சூலூர் அருகே பொங்கல்தொகுப்பு வழங்குவதில் ஏற்பட்ட தகராறில் பெண் ஊராட்சி மன்ற தலைவர் தாக்கப்பட்டார்.

பொங்கல் தொகுப்பு வழங்கிய பெண் ஊராட்சிமன்றத் தலைவர் மீது தாக்குதல்!!

கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள அப்பநாயக்கன்பட்டி ஊராட்சி மன்ற தலைவராக சாந்தி ராஜேந்திரன் இருந்து வருகிறார். பொங்கல் பரிசு தொகுப்பு பொருள்கள் நேற்று முதல் அப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. இதனை ஊராட்சி மன்ற தலைவர் சாந்தி ராஜேந்திரன் மற்றும் கலங்கல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் நடராஜன் ஆகியோர் வழங்கி துவக்கி வைக்க இருந்தனர்.

அரசு உத்தரவுப்படி 1வது வார்டு தொடங்கி வரிசையாக வழங்க டோக்கன் வழங்கப்பன்டு இருந்தது. பொங்கல் பரிசு தொகுப்புகள் வந்த நிலையில் அதற்கான பை வரவில்லை. மை எடுப்பதற்காக கடை விற்பனையாளர் தாலூகா அலுவலகம் சென்று எடுத்துக்கொண்டு தாமதமாக வந்துள்ளார். அப்போது  ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் கூட்டுறவு சங்க செயலாளர் சிவகாமி மற்றும் ஊராட்சி மன்ற  துணைத் தலைவர் நாகராஜ் ஆகியோர் பொங்கல் தொகுப்பை பொது மக்களுக்கு வழங்க துவங்கினர்.

அப்போது முன்னாள் தலைவர் தங்கவேலு தனக்கு முறையாக அழைப்பு வழங்கவில்லை என அங்கு வந்து வாக்கு வாதத்தில் ஈடுபட்டுள்ளார் ஊராட்சி தலைவர் சாந்தி ராஜேந்திரன் கையில் இருந்த பொங்கல் தொகுப்பு பொருட்கள் இருக்கும்  பையை  பிடுங்கி வீசி உள்ளார்.

இதன் காரணமாக ரேஷன் கடை ஊழியர் கடையை மூடி பூட்டியுள்ளார். பொருட்களை வாங்க வந்த பொதுமக்கள் பொருட்கள் வழங்காத்தைக் கண்டித்தும் ஊராட்சி தலைவரைத் தாக்கியதைக் கண்டித்தும் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதன் காரணமாக அப்பகுதியில் அரை மணி்நேரம்  போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. சம்பவத்தை அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சூலூர் காவல் ஆய்வாளர்மாதைய்யன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமாதானம் பேசினார். உடனடியாக் கடையைத் திறந்து பொதுமக்களுக்கு பொங்கல் தொகுப்பு  பொருட்கள் வழங்க ஏற்பாடு செய்தார். பொதுமக்கள் மறியலைக் கைவிட்டு பொருட்களை வாங்கிச் சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.