வனத்துறையினரைத் தாக்கிய சம்பவத்தால் பரபரப்பு!!! மருத்துவமனையில் அனுமதி!!!

பென்னாகரம் அருகே மலையை ஒட்டியுள்ள கிராமத்தில் நாட்டுத் துப்பாக்கி வைத்திருப்பதாக கூறி வீடு புகுந்து வனத்துறையினர் தாக்குதல். இரண்டு குழந்தைகள் உட்பட்ட நான்கு பேர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வனத்துறையினரைத் தாக்கிய சம்பவத்தால் பரபரப்பு!!! மருத்துவமனையில் அனுமதி!!!

பென்னாகரம்: தருமபுரி மாவட்டம் பென்னாகரத்தை  அடுத்த பத்ரஅள்ளி பஞ்சாயத்துக்கு உட்பட்ட    குழிக்காடு என்கின்ற மலை  கிராமத்தில் வனப்பகுதியை ஒட்டி அப்பகுதி மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில்  அர்த்தனாரி (37) இவரது மனைவி சுதா மற்றும் குழந்தைகளோடு வாழ்ந்து வருகிறார். கடந்த 31ஆம் தேதி இரவு மலை பகுதியை ஒட்டியுள்ள அவருடைய வீட்டில் நள்ளிரவில் திடீரென நுழைந்த 10க்கும் மேற்பட்ட வனத் துறையினர் அத்துமீறி  அவரது வீட்டில்  சோதனை நடத்தியுள்ளனர்.

அப்பொழுது இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த  அர்த்தனாரி மற்றும்  மனைவி சுதா, குழந்தைகள் எழுந்து பார்த்து  யார் என்று கேட்டுள்ளனர்.அதற்க்கு  தாங்கள் வனத்துறையினர் மற்றும் ஸ்பெஷல் கோடு என்று கூறியுள்ளனர். பின்னர் மறுநாள் காலை மீண்டும் வனத்துறையினர் வந்து அர்த்தனாரியிடம் விசாரணை நடத்தியுள்ளனர். அங்கு வீட்டில் நாட்டு துப்பாக்கி வைத்திருப்பதாகவும், அதனை ஒப்படைக்குமாறும் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க | ”அமெரிக்காவை ஈடுபடுத்துவது, சீனாவை நிர்வகிப்பது, ரஷ்யாவை நிர்வகிப்பது ‘சப்கா சாத்-சப்கா விகாஸ்’ என்ற இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை” எஸ். ஜெய்சங்கர்

அப்பொழுது அர்த்தனாரி தன்னிடம் எந்த நாட்டு துப்பாக்கியும் இல்லை, நான் பயன்படுத்துவதும் இல்லை என்று தெரிவித்துள்ளார். ஆனால் அதனை ஏற்க மறுத்த வனத்துறையினர் அர்த்தனாரி மற்றும் இவரது மனைவி குழந்தைகளை சரமாரியாக தாக்கிவிட்டு விசாரணைக்காக அர்த்தனாரியை அழைத்துச் சென்று சின்னம் பள்ளியில் உள்ள வனத்துறையினர் தங்கும் விடுதியில் வைத்து அடித்து சித்திரவதை செய்ததாக சொல்லப்படுகிறது.

மேலும்  தர்மபுரியில் உள்ள வனத்துறை அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்திய பொழுது வீட்டில் வைத்திருக்கும் நாட்டு துப்பாக்கி வனத்துறையினரிடம் ஒப்படைத்து விடு என வலியுறுத்தி, மிரட்டியதாகவும், தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இந்த விசாரணையின் போது நாட்டு துப்பாக்கி தன்னிடம் இல்லை என்று மறுத்து வந்த அர்த்தனாரியை வனத்துறையினர் தொடர்ந்து அரை நிர்வாணமாக, மண்டியிட வைத்து கடுமையாக தாக்கியதாகவும், அந்தரங்க பகுதி உள்ளிட்ட பகுதிகளில் கடுமையாக தாக்கியதில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும் கூரப்படுகிறது.

மேலும் கட்டிடத்தின் மாடி மீது அழைத்துச் சென்று கடுமையாக சித்திரவதை செய்துதாகவும் கூறப்படுகிறது. இதனையெடுத்து வனத்துறையினரின் துன்புறுத்தலை தாங்க முடியாமல், அர்த்தநாரி தனது வீட்டில் துப்பாக்கி இருப்பதாகவும், எடுத்து தருவதாக கூறி வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார்ஆனால் வீட்டில் நாட்டுத் துப்பாக்கி எதுவும் இல்லை. இதனையடுத்து வனத்துறையினர் அர்த்தனாரியை வீட்டில் விட்டுவிட்டு சென்றுள்ளனர்.மேலும் அர்த்தனாரி வீட்டில் நாட்டு துப்பாக்கி எதுவும் இல்லை என்று தெரிந்தவுடன் வனத்துறையினர் தப்பிக்க இவர் மீது பொய் வழக்கு போட்டு ரூபாய் 15ஆயிரம் வசூல் செய்யப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | இந்திய ரயில்வேயின் புதிய தொழில்நுட்பத்தால் திருடர்களின் வடபோச்சே மொமண்ட்!!!!!

ஆனால் வனத்துறையினர் தாக்கியதில் முழங்கால், பாதம் உள்ளிட்ட இடங்களில் வீக்கம் ஏற்பட்டு வலியால் அர்த்தனாரி துடிதுடித்துள்ளார். இதனை அடுத்து வனத்துறையினர் தாக்கியதாக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அர்த்தநாரி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் வனப்பகுதியில் ஒட்டியுள்ள தங்களை வேண்டுமென்றே வனத்துறையினர் இல்லாத நாட்டுத் துப்பாக்கியை ஒப்படைக்குமாறு அடித்து துன்புறுத்தியதாகவும், தனது கணவர் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகி இருந்து வருகிறார்.

இனி வரும் காலங்களில் அவரால் கூலி வேலைக்கு சென்று வருவாய் இட்ட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே சாதாரண கூலித் தொழிலாளியான எங்கள் குடும்பத்தினரை அடித்து, சித்திரவதை செய்த வனத்துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்களது குடும்பத்திற்கு வனத்துறையினர் இழப்பீடு தொகை வழங்க வேண்டும் என அவரது மனைவி கோரிக்கை விடுத்துள்ளார்.