வீட்டுக்கு வீடு பீமா மூங்கில் மரம் வளர்க்கும் உலக சாதனை முயற்சி...

தமிழகம் முழுவதும் சுற்றுச்சூழலை மீட்டெடுக்க வீட்டுக்கு வீடு பீமா மூங்கில் மரம் வளர்க்கும் உலக சாதனை முயற்சியை தனியார் சுற்றுச்சூழல் அமைப்பு முன்னெடுத்துள்ளது.

இதுதொடர்பாக சென்னை சேப்பாக்கம் பத்திரிக்கையாளர் மன்றத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தனியார் சுற்றுச்சூழல் அமைப்பினர் கடந்த 16 வருடங்களாக உலக வெப்பமயமாதலை தடுக்க சுற்றுச்சூழல் சார்ந்த பல்வேறு முயற்சிகள் முன்னெடுத்து வருவதாகவும், அந்த வகையில் காற்றை சுத்திகரிக்கவும் உயிர் காற்றின் அளவை அதிகரிக்கவும் வீட்டுக்கு வீடு ஒரு மரம் வளர்க்கவும் ஒரு உலக சாதனை நிகழ்ச்சியின் முன்னெடுப்பதாக தெரிவித்தனர்.

அப்துல் கலாம் அவர்களின் கனவை நினைவாக்கும் வகையில் தமிழகம்
முழுவதும் 100 கோடி மக்களுக்கு பீமா மூங்கில் மரத்தை வழங்கும் உலக சாதனை முயற்சியை வரும் நவம்பர் 14ஆம் தேதி முதல் அடுத்த ஆண்டு நவம்பர் 14ஆம் தேதி வரை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவித்தனர்.