தம்மை பற்றி புகழ்ந்து பேசுவதை தவிர்க்க வேண்டும்: திமுக உறுப்பினர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கட்டளை...

தம்மை பற்றி புகழ்ந்து பேசுவதை தவிர்க்க வேண்டும் என, சட்டப்பேரவையில் திமுக எம்.எல்.ஏ.க்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் மீண்டும் ஒருமுறை கட்டளையிட்டுள்ளார். 

தம்மை பற்றி புகழ்ந்து பேசுவதை தவிர்க்க வேண்டும்: திமுக உறுப்பினர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கட்டளை...

வேளாண்மை, கால்நடை, மீன்வளம் மற்றும் பால்வளத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது பேசிய தி.மு.க. உறுப்பினர் ஐயப்பன், முதலமைச்சர் ஸ்டாலினை புகழ்ந்து பேசியுள்ளார். உடனே குறுக்கிட்டு பேசிய ஸ்டாலின், ஆளும் கட்சி உறுப்பினர்கள் நேரத்தின் அருமை கருதி பேச வேண்டும் என்றும், தம்மை புகழ்ந்து பேசுவதை அளவாக வைத்துக் கொள்ள வேண்டும் என தாம் கட்டளையிட்டிருப்பதை நினைவில் கொள்ள வேண்டும் எனவும் எச்சரித்துள்ளார்.

இதற்காகவே ஆளும் கட்சி உறுப்பினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ள அவர், மானிய கோரிக்கை மீது மூன்று அமைச்சர்கள் பதிலுரை வழங்க இருப்பதால், கொடுக்கப்பட்டிருக்கும் நேரத்தை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.