"பாஜக தமிழ்நாடு அரசை பயமுறுத்த நினைக்கின்றது"  கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு!

"பாஜக தமிழ்நாடு அரசை பயமுறுத்த நினைக்கின்றது"  கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு!

பாஜக தமிழ்நாடு அரசை பயமுறுத்த நினைக்கின்றது  என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

அமைச்சர் செந்தில் பாலாஜி கைதையொட்டி கடலூரில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ஒரு வார காலம் செந்தில் பாலாஜி மற்றும் அவரது உறவினர்கள் வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. ஆனால் சோதனை எதற்காக நடத்தப்பட்டது. சோதனையில் என்ன கண்டுபிடிக்கப்பட்டது என அமலாக்கத்துறை இதுவரை கூறவில்லை. இந்தியாவில் ஒரு நபர், ஒரு அமைப்பால் விசாரணை செய்யப்படும்போது அதற்கான காரணத்தை சொல்ல வேண்டும். இந்திய சட்ட திட்டங்கள் அவ்வாறுதான் இதுவரை செயல்படுகின்றன.  

செந்தில் பாலாஜி கள்ளக் கடத்தல் காரர் அல்ல, தேச துரோகம் செய்பவர் அல்ல, பயங்கரவாதி அல்ல, ஆயுதக் கடத்தல் காரர் அல்ல, இந்தியா ஒருமைப்பாட்டிற்கு பங்கம் விளைவிக்கிற நபர் அல்ல அப்படி இருக்கிற பொழுது அவரை எப்பொழுது வேண்டுமானாலும் எஎப்படி வேண்டுமானாலும் முறைப்படி விசாரணை நடத்தலாம் என தெரவித்தார்.

ஆனால், ஏதோ ஒரு தேசத்துரோகியை அழைத்து செல்வதைப் போல இந்திய பிரிவினைக்காக குரல் கொடுக்கிற வரை இழுத்து செல்வதை போல அமலாக்கத்துறை அவரை அழைத்து செல்வது எந்த வகையில் நியாயம் எனக் கேள்வி எழுப்பிய கே.எஸ். அழகிரி, ஒருவரை விசாரிக்க வேண்டும் என்றால் அதற்குறிய  முறைப்படி தான் விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

முதலமைச்சரையும் தமிழ்நாடு அரசையும் பயமுறுத்த பாஜக நினைப்பதாக குற்றம் சாட்டிய அழகிரி, பாஜக ஆர்.எஸ்.எஸ் சிந்தாந்தத்திற்கு எதிராக முதலமைச்சர் இருப்பதாகவும், இதுபோன்ற நடவடிக்கைகளின் மூலம் அவரை பயமுறுத்த நினைக்கிறார்கள் அவர்களது எண்ணம் ஒருபோதும் பலிக்காது என தெரிவித்தார்.

மேலும், தமிழர்களுக்கு என்று ஒரு குணம் இருக்கிறது. உங்களுக்காக கைகூப்பி வணங்கவார்களே தவிர, தலை வணங்கிவிட மாட்டார்கள் பாஜக தமிழர்களை தலைவணங்கச் செய்யலாம் என்று கருதுகிறீர்கள் அது ஒரு போதும் நடக்காது என எச்சரிக்கை விடுத்தார். 

இதையும் படிக்க:அடுத்தக்கட்ட ஆளுமைகள்!