"ஒரு வழக்கிற்கே சீமான் பயந்து விட்டார்" -பாஜக தலைவர் அண்ணாமலை!

"ஒரு வழக்கிற்கே சீமான் பயந்து விட்டார்" -பாஜக தலைவர் அண்ணாமலை!

ஒரு வழக்கிற்காக சீமான் பயந்துவிட்டார். திமுகவின் பி டீம் சீமான் என தூத்துக்குடி விமான நிலையத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கடுமையாக சாடியுள்ளார். 

என் மண் என் மக்கள் நடைபயண யாத்திரையை பாஜக தலைவர் அண்ணாமலை இரண்டாம் கட்டமாக இன்று தென்காசியில் இருந்து மேற்கொள்கிறார். இதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வாகை குளம் விமான நிலையம் வருகை தந்த அவர் அங்கு செய்தியாளர்களை சந்தித்தார். 

அப்போது பேசிய அவர், கடந்த சில நாட்களுக்கு முன்னர் நெல்லையில் இளைஞரணி செயலாளர் ஜெகன் வெட்டி படுகொலை செய்ய்யப்பட்டர். மேலும்,நேற்று. திருப்புரில் உள்ள பல்லடத்தில் பாஜகவை சேர்ந்த மோகன் என்ற கிளை தலைவர் அவரது தம்பி, அம்மா, சித்தி ஆகிய 4பேர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாடு எங்கே போகின்றது. கொங்கு வரலாற்றில் இதைப் போன்ற அரிவாள் வெட்டு சம்பவத்தை யாரும் பார்த்தது கிடையாது. தமிழகம் முழுவதும் குடிகார நாடாக மாறி இருக்கிறது. தமிழகம் வன்முறை கலாச்சார மாநிலமாக இருக்கிறது. இதற்கு அடிப்படை குடி. இனியாவது திமுக தன்னுடைய நிலையை மாற்றிக்கொண்டு குடியில் இருந்து விடுதலை கொடுக்க வேண்டும் என தெரிவித்தார். 

தொடர்ந்து சீமான் பற்றி செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில், ஒரு பெண், ஒரு வழக்கு கொடுத்தற்கு பின் சீமான் பயந்துவிட்டார் என்பதை இப்போதுதான் பார்க்கின்றேன். அவரிடம் எனக்கு பிடித்தது தைரியம் தான். ஆனால் ஒரு புகாருக்க பயந்து நாங்களும் திராவிட கட்சிகளும் பங்காளி என்கின்றனர். கடந்த வாரம் வரைக்கும் வேறு ஒரு சீமான். இப்போது வேறொரு சீமான். இது 2.0 சீமான் என தெரிவித்தார். 

ராமநாதபுரத்தில் திமுக நிற்கவில்லை என்றால் சீமான் நிற்பதாக சொல்கிறார். திமுகவின் பி கட்சி என்று நாம் தமிழர் சொல்லிக் கொள்ள வேண்டியதுதானே எனக் கூறிய அண்ணாமலை, ஒரு மனிதனை ஒரு கம்ப்ளைன்ட் எந்த அளவுக்கு மாற்றி இருக்கிறது என்று பாருங்கள் எனக்கூறி வருந்தினார். மேலும், சீமான் இந்த அளவுக்கு பேசுவார் என்று தான் எதிர்பார்க்கவில்லை எனவும் தெரிவித்தார். 

தானே இவர்களாகவே ஒரு யூகத்தின் அடிப்படையில் பிரதமர் ராமநாதபுரத்தில் போட்டியிடுவார் என்று அவர்கள் நேற்று பேசியது அவர் மீது வைத்திருக்கின்ற மரியாதையை  பெருமளவு குறைந்திருக்கிறது எனக் கூறிய அவர் சீமானை தைரியமாக பேசக்கூடியவர் என்று நினைத்ததாகவும், ஆனால் ஒரு புகாருக்கே சீமான் திமுகவை சார்ந்து பேசுவார் என்றும் திமுகவை பங்காளி என்று கூறுவார் என்றும் நினைத்து பார்க்கவில்லை என்றார்.

இதையும் படிக்க: வெற்றி மாறனின் வெற்றி பயணங்கள்...!