முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாமக தலைவர் ஜிகே மணி நன்றி...

கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் வன்னியருக்கு 10 புள்ளி 5 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கி அரசாணை வெளியிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாமக தலைவர் ஜிகே மணி நன்றி தெரிவித்தார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாமக தலைவர் ஜிகே மணி நன்றி...

மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்புக்கான 20 சதவீத இட ஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு 10 புள்ளி 5 சதவீதம், சீர் மரபினருக்கு 7 சதவீதம், இதர சமூகங்களுக்கு 2 புள்ளி 5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கும் அரசாணையைத் தமிழ்நாடு அரசு நேற்று வெளியிட்டது.

இதனை தொடர்ந்து சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சரை சந்தித்த பா.ம.க தலைவர் ஜி. கே.மணி மற்றும் அக்கட்சி நிர்வாகிகள் நன்றி தெரிவித்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஜி கே மணி, 10 புள்ளி 5 சதவீத இட ஒதுக்கீட்டினால் எந்த சமுதாயத்துக்கும் பாதிப்பு இல்லை எனத் தெரிவித்தார். சமூக நீதியின் அடிப்படையே சாதி வாரியான கணக்கெடுப்பு தான் என்றும், மத்திய அரசும், மாநில அரசும் இந்த கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்