மக்களின் பிரச்சனைகளை தீர்க்காத வக்கத்த மத்திய அரசு... கடுமையாக விமர்சித்த பாலகிருஷ்ணன்...

தமிழகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை பொறுத்த வரை  நீட் தேர்வு தேவைஇல்லை என்பது தான் எங்கள் முடிவு என்று மாநிலசெயலாளர் பாலகிருஷ்ணன் பேட்டி

மக்களின் பிரச்சனைகளை தீர்க்காத வக்கத்த மத்திய அரசு... கடுமையாக விமர்சித்த பாலகிருஷ்ணன்...

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர், சுதந்திர போராட்ட தியாகி  சங்கராயாவின் நூற்றாண்டு பிறந்த நாளை முன்னிட்டு  சென்னை தியாகராயநகரில் உள்ள இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகத்தில் சங்காரய்யாவின் வாழ்க்கை வரலாறு அடங்கிய  குறுந்தகடு வெளியீட்டு விழா நடைபெற்றது. விழாவின் முடிவில் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர்;

தமிழகத்தில் இன்னும் கொரனா பாதிப்பு உள்ள காரணத்தால் குறைவான நபர்கள் கொண்டு மூத்த தலைவர்    சங்கரய்யா பிறந்த நாள் கொண்டாட உள்ளோம்..
15/07/2021நாளை முதல் 15/07/2022 வரை ஒரு வருடம் நூற்றாண்டு பிறந்தநாள் கொண்டாட்டம் நடைபெறும்.

தொடர்ந்து பேசிய அவர் நீட் தேர்வு தேதி அறிவிப்பு தொடர்பான கேள்விக்கு, தமிழகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை பொறுத்த வரை  நீட் தேர்வு தேவைஇல்லை என்பது தான் எங்கள் முடிவு.   உயர்நீதிமன்றதில் நீட் தேர்வு தொடர்பான வழக்கில் நாங்களும் கலந்து கொள்வோம் எனவும் நீட் தேர்வுக்கு எதிரான போராட்டத்தில்  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து போராடும் எனவும் அவர் தெரிவித்தார்.

மேலும் பாஜக அரசியல் ஆதாயத்திற்காக   கொங்குநாடு என்ற தனிநாடு உருவாக்க நினைகின்றனர். மக்களின் பிரச்சினைகளை தீர்க்க வக்ககத்த அரசாகதான் மத்திய அரசு உள்ளது எனவும் குற்றம் சாட்டினார்.