"வாயில் நுழையாத பெயர்களை மசோதாவிற்கு வைத்துள்ளனர்" வழக்கறிஞர்கள் சங்கம் குற்றச்சாட்டு!

"வாயில் நுழையாத பெயர்களை மசோதாவிற்கு வைத்துள்ளனர்" வழக்கறிஞர்கள் சங்கம் குற்றச்சாட்டு!

குற்றவியல் திருத்த மசோதாவிற்கு வாயில் நுழையாத பெயர்களை வைத்துள்ளதாக அகில இந்திய வழக்கறிஞர் கூட்டமைப்பு சங்கத் தலைவர் சக்தி சீலன் குற்றம் சுமத்தியுள்ளார்.

சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில்  அகில இந்திய வழக்கறிஞர் கூட்டமைப்பு சார்பாக குற்றவியல் சட்டங்களை ஹிந்தி மற்றும் சமஸ்கிருதத்தில் பெயர் மாற்றம் செய்ததை கண்டித்து அகில இந்திய வழக்கறிஞர் கூட்டமைப்பு சங்கத் தலைவர் சத்திய சீலன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், மத்திய அரசு பாராளுமன்றத்தில் குற்றவியல் சட்ட திருத்த மசோதாவை திருத்தியுள்ளது. இதை  வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு வன்மையாக  கண்டிக்கிறது. அரசியலமைப்பு சட்டத்திற்கு அப்பாற்பட்டு பிரதமர் மோடி செயல்படுகிறார். இதை எதிர்த்து தென்னிந்தியாவில் மட்டும் தான் எதிர்ப்புகள் தெரிவிக்கின்றனர். முக்கியமாக தமிழகத்தில் தான் பெரும்பாலோனோர் கண்டனம் தெரிவிக்கின்றனர். ஆனால் பிஜேபி ஆளும் மாநிலங்கள் இவர்கள் யாரும் இந்த திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என கூறினார். எனவே இந்த மசோதாவை உடனடியாக வாபஸ் வாங்க வேண்டும் என்று வழக்கறிஞர் கூட்டமைப்பு  சார்பாக தெரிவித்தார். இதை நிறைவேற்றவில்லை என்றால் மதுரையில் அனைத்து வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு  சார்பாக மாபெரும் மாநாடு நடத்தப் போவதாக கூறினார்.

வாயில் நுழையாத பெயர்களை குற்றவியல் திருத்த மசோதாவிற்கு வைத்துள்ளனர். பொதுமக்களின் பணத்தில் உருவாக்கப்பட்ட சந்திராயனை பிரதமர் மோடியின் பணத்தால் மட்டும் தான் உருவாக்கியது என்று  வானதி சீனிவாசன் கூறினார். இதனை வழக்கறிஞர் சங்கம் கண்டிக்கிறது. தமிழகத்தில் ஹிந்தி திணிப்புக்கு எதிராக பல போராட்டங்கள் நடந்த வண்ணம் இன்று வரை உள்ளது. எனவே இந்த மசோதாவை உடனடியாக கைவிட வேண்டும் என்று கூறினார்.

வருகின்ற  நாடாளுமன்ற தேர்தலில் மத்திய அரசு இதே குறிக்கோளுடனும் மக்களுக்கு இடையூறாக இருக்கும் வகையில் செயல்பட்டால் மத்தியில் மோடி அரசு தோற்கடிகப்படும் என்றார். நடைமுறைக்கு ஏற்றவாறு சட்டங்களை திருத்தலாம் ஆனால் அதன் பெயர்களை மாற்றுவது தான் தவறு என வழக்கறிஞர் சங்கம் தலைவர் கூறினார். அமைச்சர்களின் வழக்கை தாமாக முன்வந்து நடவடிக்கை எடுக்கும் உயர் நீதிமன்றம் ஏன் பொது வழக்குக்களை கையில் எடுப்பதில்லை. இங்கு ஒரு வழக்கு பணத்தை வைத்து தான் தீர்மானிக்க படுகிறது. இங்கு  சட்டத்தை வைத்து தான் அரசியல் நடக்கிறது என தெரிவித்தார்.

இதையும் படிக்க:காதலிப்பது போல ஏமாற்றி பணம் சுருட்டிய வாலிபர்!