ஐஐடியில் மாட்டுக்கறி விவகாரம் - முடித்து வைத்த சென்னை உயர்நீதிமன்றம்

ஐஐடியில் மாட்டுக்கறி விவகாரம் - முடித்து வைத்த சென்னை உயர்நீதிமன்றம்

மாட்டுக்கறி விவகாரம் தொடர்பாக போராட்டம் நடத்திய சென்னை ஐஐடி மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய காவல்துறையினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரிய வழக்கை முடித்துவைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை ஐ.ஐ.டி.யில்   மாட்டுக்கறி உண்ணும் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த மாணவர்கள் மீது, ஏ.பி.வி.பி அமைப்பினர்  தாக்குதல் நடத்தினர். இச்சம்பவத்தை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட மாணவர்களை காவல் துறையினர் தாக்கியதாகவும், அந்த அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க குழு அமைக்கும்படி உத்தரவிடக் கோரி  டிட்டி மேத்யூ என்ற மாணவி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். 

Types of beef varities tasty meat to eat healthy | Beefல இத்தனை varietyஆ  ருசியான மாட்டுக்கறி வகைகள் | News in Tamil

மேலும் படிக்க | வனத்துறையினருக்கு 200 மின்சார வாகனங்களை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
 
இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்கபுர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்த போது, ஏற்கனவே இந்த விவகாரம் தொடர்பாக குழு அமைக்கப்பட்டு, மாணவர்கள் செயலுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டதாக ஐ.ஐ.டி. தரப்பில் தெரிவிக்கப்பட்டது.இந்த சம்பவம் தொடர்பாக ஆறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, நீதிமன்ற விசாரணையில் இருப்பதாக அரசுத்தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது.

சென்னை ஐ.ஐ.டியில் மாட்டுக்கறி விழா ஏற்பாடு செய்த மாணவர் சுராஜ் மீது  தாக்குதல்!- Dinamani

இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், மாணவர்கள் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் எனவும்,  வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால் எந்த உத்தரவும் பிறப்பிக்க விரும்பவில்லை எனக் கூறி வழக்கை முடித்து வைத்தனர்.

மேலும் படிக்க | சாராய வியாபாரிகளிடம் ரகசிய தொடர்பு: சிறப்பு உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம்!