சென்னை விமான நிலையத்தில் போதுமான பணியாளர்கள் இருந்திருந்தால் பெண்ணின் உயிரை காப்பாற்றி இருக்கலாம்...!

சென்னை விமான நிலையத்தில் போதுமான பணியாளர்கள்  இருந்திருந்தால் பெண்ணின் உயிரை காப்பாற்றி இருக்கலாம்...!

சென்னை விமான நிலையத்தில் அடுக்கு மாடி மல்டி லெவல் கார்பார்கிங் பகுதியில் கார்களை ஒழுங்கு படுத்தும்  பகுதியில் போதிய பணியாளர்கள் இல்லாததால் தினந்தோறும் வாகனத்தை நிறுத்துவதற்கு  வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.

அது மட்டும் இன்றி வாகனத்தை நிறுத்துமிடத்திலிருந்து வெளியே எடுப்பதற்கு வெகு நேரம் ஆவதால் விமான நிலையத்தை விட்டு வெளியே செல்லும் பொழுது கூடுதலாக நேரம் ஆவதாகவும் வாகனத்துடன் வெளியேறும் போது பார்கிங் நிர்வாகிகள்  கூடுதல் கண்டனம் வசூலிப்பதாவும் அங்குள்ள பணியாளர்களும் அடையாள அட்டை கூட இல்லாமல் வாகன ஓட்டுனர்களை மிரட்டுவதாகவும்  புகார் தெரிவித்தனர்.

இதையும் படிக்க    ]  தூத்துக்குடியில் போதை விழிப்புணர்வு மாரத்தான்..! - எம்.பி. கனிமொழி துவக்கி வைத்தார்.

இந்நிலையில்,   நேற்று இரவு பெண் ஒருவர் 4-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டு உள்ளார், பார்க்கிங் பகுதியில்  பணியாளர்கள் இருந்திருந்தால் பெண் தற்கொலை செய்வதற்கு முன்பு அவரை தடுத்து நிறுத்திருக்கலாம், இனியாவது கார் பார்க்கிங் பகுதியில் கூடுதலாக பணியாளர்கள் அமர்த்த வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

இதையும் படிக்க    ]  சூடானிலிருந்து மீட்கப்பட்டவர்களில்,... தடுப்பூசி செலுத்தாதவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்....!