காலை உணவு திட்டம்: சுத்தமான குடிநீர் வழங்க ஆட்சியர் அறிவுறுத்தல்..!

காலை உணவு திட்டம்:  சுத்தமான குடிநீர் வழங்க ஆட்சியர் அறிவுறுத்தல்..!

திருவள்ளூரில் காலை உணவு திட்டத்தை ஆய்வு செய்ய வந்த ஆட்சியருக்கு சுத்தமான குடிநீர் வழங்கப்படாதது சலசலப்பை ஏற்படுத்தியது. 

திருவள்ளூர் நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் காலை உணவு திட்டம் விரிவுபடுத்தப்படுவது குறித்து திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் நேரில் ஆய்வு செய்தார்.

பின்னர் மாணவர்களிடம் உணவு தரமாக உள்ளதா சுவையாக உள்ளதா என மாவட்ட ஆட்சியர் கேட்டறிந்தார். இதனைத் தொடர்ந்து மாணவர்களுக்கு உணவு பரிமாறிய மாவட்ட ஆட்சியர் மாணவர்களுடன் அமர்ந்து காலை உணவு திட்ட உணவினை அருந்தி அதன் தரத்தை ஆய்வு செய்தார்.

மாணவர்களுடன் அமர்ந்து மாவட்ட ஆட்சியர் உணவு அருந்திய நிலையில் தனக்காக டம்ளரில் வைத்திருந்த தண்ணீரை எடுத்து குடிக்க முயன்ற போது டம்ளர் சுத்தமாக இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்து தண்ணீர் குடிப்பதை தவிர்த்து டம்ளரை கீழே வைத்தார்.

பின்னர் ஊழியர்களிடம் டம்ளர் சுத்தமாக கழுவவும் சுத்தமான தண்ணீர் வைப்பதை உறுதி செய்யுமாறும் அறிவுறுத்தினார்.

இதற்கு ஊழியர்கள் டம்ளர் கழுவிதான் வைக்கப்பட்டது சார் எனவும் மாணவர்களுக்கு டம்ளரில் தண்ணீர் வைத்தால் அடிக்கடி தட்டிவிட்டு கீழே கொட்டி விடுவதால் அவர்களாகவே வாட்டர் பாட்டில் மூலம் தண்ணீர் கொண்டு வர அறிவுறுத்த ப்பட்டுள்ளனர் என சம்பந்தமே இல்லாத மழுப்பலான பதிலை தெரிவித்தனர்.

இதனை அடுத்து சுத்தமான தண்ணீரை உறுதி செய்யுமாறு ஊழியர்களுக்கு அறிவுறுத்திவிட்டு தான் உணவு அருந்த முடித்த தட்டினை தன் கையால் எடுத்துச் சென்று தட்டு கழுவும் இடத்தில் வைத்தது அனைவரின் பாராட்டுதலை பெற்றது

மேலும் கை கழுவும் இடத்தினை சுத்தமாக வைக்க அறிவுறுத்தியதுடன் மாணவர்களுக்கு போதிய இடவசதி இல்லாதது குறித்து கேட்டு அறிந்து அதற்கான தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.

மாணவர்களுடன் அமர்ந்து காலை உணவினை அருந்திய மாவட்ட ஆட்சியருக்கு சுத்தமான குடிநீர் வைக்காத ஊழியர்கள், மாணவர்களுக்கு எவ்வாறு சுத்தமான குடிநீரை கொடுப்பார்கள் என கேள்வி எழுப்பவில்லை சமூக ஆர்வலர்கள் சுத்தமான குடிநீர் வைக்காத ஊழியர்களின் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைத்துள்ளனர்.