“ஆனால் ஒருபோதும் இந்தியாவில் அது வெற்றி பெறாது....” கே.எஸ்.அழகிரி!!

“ஆனால் ஒருபோதும் இந்தியாவில் அது வெற்றி பெறாது....” கே.எஸ்.அழகிரி!!

அண்ணல் அம்பேத்காரின் 133ஆவது பிறந்த நாளை கொண்டாடும் விதமாக சென்னை ராயப்பேட்டையில் உள்ள சத்தியமூர்த்தி பவனில்  வைக்கப்பட்டுள்ள அம்பேத்கரின் திருவுருவ படத்திற்கு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி , சட்டமன்ற உறுப்பினர் செல்வ பெருந்தகை, திருநாவுக்கரசு உள்ளிட்டோர் உடன் இருந்து மலர் தூவி மரியாதை செலுத்திய பின் இனிப்புகள் மற்றும் புத்தாடைகள் வழங்கினர்.

தியாகத்தால் பல மாற்றங்கள்:

பின்னர்  செய்தியாளர்களை சந்தித்து பேசிய கே.எஸ் அழகிரி, மனித விடுதலை என்கின்ற ஒற்றைக் குறிக்கோளில் வேறுபாடு இருக்கக் கூடாது என்று தன்னுடைய வாழ்நாள் முழுவதும் அர்ப்பணித்தவர் இந்திய சமூகத்தில் சமநிலையை கொண்டு வர முயற்சித்தவர் , இந்தியாவிற்கு அரசியல் சட்டத்தை வழங்கியவர் மக்களை பிரிக்க கூடாது என வார்த்தையை அரசியல் சட்டத்தில் கொண்டு வந்தவர் ஜாதியின் பேராலோ மொழியின் பெயராலோ மதத்தின் பெயராலோ இனத்தின் பெயராலோ மக்கள் பிரிக்க பட மாட்டார்கள் என உறுதி மொழியை அரசியல் சட்டத்தில் இயற்றியவர் குறிப்பாக காங்கிரஸில் சட்ட அமைச்சராக பணியாற்றியவர் அவரின் தியாகம் தான் இந்தியாவிற்கு பல மாற்றங்களை கொண்டு வந்திருக்கிறது என அம்பேத்கரைக் குறித்து பெருமையாக பேசினார்.  

வெற்றி பெறாது:

மேலும் ஜவஹர்லால் நேரு அவரை அழைத்து சட்டத்துறை அமைச்சராக அமர வைத்து சட்டம் ஏற்றுவதற்காக ஒரு வாய்ப்பு வழங்கியதால் தான் இப்போது நல்ல அரசியல் சட்டம் நமக்கு கிடைத்திருக்கிறது எனவும் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அரசாங்கம் அந்த மாற்றத்தை ஏற்று கொள்ளவில்லை எனவும் சனாதனம் என்ற பெயரில் பழமை என்றும் இருக்க வேண்டும் என விரும்புவதாகவும் கூறிய அவர் ஆனால் ஒருபோதும் இந்தியாவில் அது வெற்றி பெறாது எனக் கூறினார்.

ஊழல் பட்டியல்:

தொடர்ந்து பேசிய கே.எஸ். அழகிரி ஊழல் பட்டியல் வெளியிடுவது என்பது யார் வேண்டுமானாலும் வெளியிடலாம் எனவும் நான் கூட தான் 100 பக்க அளவில் மோடி பெயரில் ஊழல் பட்டியல் வெளியிட முடியும் எனவும் என்னிடமும் ஆதாரம் உள்ளது எனவும் தெரிவித்த அவர் திமுக அரசு இதனை எதிர்கொள்ளும் எனவும் தோழமைக் கட்சிகளும் உறுதுணையாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.

இதையும் படிக்க: வடபழனி ஆண்டவர் கோவில் சார்பாக தொடரப்பட்ட வழக்கு... காரணம் என்ன?!!