சூப்பர் கிங்ஸ் - ராஜஸ்தான் ஐ.பி.எல் போட்டி ..! இரவு 1 மணி வரை மெட்ரோ வாயில் இயக்கம்....!

சூப்பர் கிங்ஸ் -  ராஜஸ்தான் ஐ.பி.எல்  போட்டி ..!  இரவு 1 மணி வரை மெட்ரோ வாயில் இயக்கம்....!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் இடையேயான ஐபிஎல் கிரிக்கெட் இன்று நடைபெறுகிறது. இப்போட்டியை காண வரும் ரசிகர்களின் வசதிக்காக, சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் பயண நேரத்தை நீட்டித்துள்ளது. 

சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் (ஆர்ஆர்) அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டி இன்று நடக்கவிருக்கிறது.இதனைத்தொடர்ந்து,  இன்று மாலை 7:30 மணிக்கு அரசு எஸ்டேட்டில் இருந்து 5 முதல் 15 நிமிட இடைவெளியில் ரயில்களை இயக்க சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் (சிஎம்ஆர்எல்) முடிவு செய்துள்ளது. 

இதையும் படிக்க:...    ஆன்லைன் ரம்மி தடைச் சட்டத்திற்கு சரத்குமார் ஆதரவு...!!

 இரவு 1 மணி வரை மெட்ரோ ரயில் இயக்கம்.... 

அந்த செய்திக்குறிப்பில், "கிரிக்கெட் ரசிகர்களின் வசதிக்காக, ஐபிஎல் போட்டி முடிந்ததும், அரசு எஸ்டேட் மெட்ரோ நிலையத்தில் இருந்து 5 முதல் 15 நிமிட இடைவெளியில் ரயில்களை இயக்க CMRL ஏற்பாடு செய்துள்ளது. கடைசி ரயில் நள்ளிரவு 1 மணிக்கு அரசு எஸ்டேட் நிலையத்தில் இருந்து புறப்படும். " என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதையும் படிக்க:... அரசு ஒதுக்கிய மயான பாதை: பயன்பாட்டிற்கு கொண்டுவரக்கோரி இருளர்கள் மனு

 சென்னை சூப்பர்  கிங்ஸ் அணி இன்றி விளையாட இருப்பதால் ரசிகர்களின் வரத்து அதிகம் இருக்கும் என்பதை கருத்தில் கொண்டு அவர்களால் வந்துசெல்ல ஏதுவாக இந்த ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.