சி.வி.சண்முகம் நாக்கை அறுக்க வேண்டும்... சசிகலாவிடம் ஆவேசமாக கூறிய பெரியகுளம் ராமகிருஷ்ணன்...

உங்களை சமையல் செய்ய வந்தவர் என்று கூறிய சி.வி. சண்முகம் நாக்கை அறுக்க வேண்டும் என பெரியகுளம் ராமகிருஷ்ணன் ஆவேச பேச்சு.

சி.வி.சண்முகம் நாக்கை அறுக்க வேண்டும்... சசிகலாவிடம் ஆவேசமாக கூறிய பெரியகுளம் ராமகிருஷ்ணன்...
சொத்துக்குவிப்பு வழக்கிலிருந்து வெளியே வந்தபின்பு அரசியலிலிருந்து ஒதுக்கியிருந்த சசிகலா, சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு சமீபகாலமாக அதிமுக நிர்வாகிகளிடமும், தொண்டர்களிடமும் தொடர்ந்து தானாகவே பேசி ஈபிஎஸ், ஓபிஎஸ் வயிற்றில் புளியைக் கரைத்து வருகிறார்.
 
தினமும் நாலைந்து ஆடியோக்களை வெளியிடுகிறார் சசிகலா. அவரிடம் பேசும் அதிமுகவினரும் அம்மா, தாயே, அதிமுகவை காப்பாற்ற வந்த காவல் தெய்வமே என்று கோவில் கட்டி பூஜை செய்யாத குறையாக கெஞ்சி, அழுது அவரை அரசியலுக்கு அழைக்கின்றனர். 
 
இந்நிலையில் அதிமுக நிர்வாகி பெரியகுளம் ராமசாமி சசிகலாவிடம் பேசிய ஆடியோ வெளியாகியிருக்கிறது. சசிகலாவிடம் பேசிய அவர்,
 
அம்மா, கிளியை வளர்த்து பூனையிடம் கொடுத்தது போல் கொடுத்தது போல தொண்டர்கள் கஷ்டப்பட்டு கட்சியை வளர்த்த கட்சியை அவர்களிடம் கொடுத்து இன்று ஒன்றுமில்லாமல் ஆக்கிவிட்டார்கள். நீங்க கட்சியிலேயே இல்லை சமையல் செய்ய வந்தவர்னு சொன்ன சிவி சண்முகம் நாக்கை அறுக்க வேண்டும் என்று ஆவேசமாக கூறினார். கட்சி தொண்டர்களுக்கு நீங்கள் நிறைய செய்திருக்கீங்க.
 
இன்று உங்களையும் கெடுத்து கட்சியையும் கெடுத்து விட்டார்கள். புள்ளப்பூச்சி போல் இருந்து ஆட்சியை பிடித்திடலாம் என்று நினைத்தார்கள் ஒன்றும் நடக்கவில்லை. நீங்கள் நிச்சயம் வரவேண்டும் துரோகிகளின் முகத்திரையை கிழித்து எரிய வேண்டும். எத்தனையோ தியாகம் செய்து நீங்கள் காப்பாற்றிய கட்சி இன்று அந்த குரங்கு கூட்டத்திடம் இருக்கிறது உணர்ச்சிப்பூர்வமாக பேசினார். 
 
அவருடன் பேசிய சசிகலா, அடிமட்ட தொண்டனாக நீங்கள் இருப்பதால் அது உங்களுக்கு தெரிகிறது அதனால் தான் இப்படி உணர்ச்சிபூர்வமாக பேசுகிறீர்கள். நான் வருவதற்கு ரெடியாக தான் சொன்னேன் மத்தவர்கள் தான் கேட்கவில்லை அதனால் தான் இன்று ஆட்சியை இழந்து நிற்கிறார்கள். அம்மா அவர்கள் யரையெல்லாம் கட்சியில் இருந்து நீக்கி வைத்தார்களோ அவர்களையெல்லாம் இப்போது சேர்த்து கொண்டு உள்ளனர். வெளியில் இருக்க வேண்டியவர்கள் உள்ளே இருக்கிறார்கள் உள்ளே இருக்க வேண்டியவர்கள் இன்று வெளியில் உள்ளார்கள்.  நான் தொண்டர்கள் யாரையும் விட்டுவிட மாட்டேன். சீக்கிரமாக வந்துவிடுவேன் என்று ஆறுதல் கூறினார்.