கிடப்பில் போடப்பட்ட கால்வாய் திட்டம்..! கண்டுகொள்ளாத கனிமொழி எம்.பி..!

கிடப்பில் போடப்பட்ட கால்வாய்  திட்டம்..!  கண்டுகொள்ளாத கனிமொழி எம்.பி..!

சாத்தான்குளம் அருகே கெனடியன் கால்வாய் திட்ட பணிகளை விரைந்து முடிக்கக்கோரி பொது மக்கள்முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். 

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே அரசூர் பஞ்சாயத்து மற்றும் கிராம நிர்வாக பஞ்சாயத்துகளுக்கு உட்பட்ட கிராமங்களில் கடந்த சில நாட்களாக  குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. கோடை காலமாக இருப்பதாலும் மற்றும் அணைகளில் நீரில்லாத காரணத்தினாலும்  கூட்டு குடிநீர் மற்றும் வீடு குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். 

இந்த நிலையில் அரசூர் கிராம நிர்வாக அலுவலகம் மற்றும் பஞ்சாயத்து அலுவலகத்தை 50க்கும் மேற்பட்ட பெண்கள் காலி குடங்களுடன் முற்றுகையிட்டு தமிழக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.

குறிப்பாக அரசூர் பஞ்சாயத்து உட்பட்ட எம் எல் தேரி பகுதியில் நடைபெற்று வரும் வெள்ள நீர் கால்வாய் திட்ட பணிகளை விரைந்து முடிக்கவும் பொது மக்களுக்கு முறையான குடிநீர் வழங்கவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில் இது குறித்து, இந்து முன்னணி மாநில பொதுச்செயலாளர் அரசூர் ராஜா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த போது;-  

அது மட்டுமல்லாமல் தூத்துக்குடி மாவட்டத்தின் பாராளுமன்ற உறுப்பினராக உள்ள கனிமொழி வெள்ளநீர் கால்வாய் திட்டத்தை கண்டு கொள்ளாமல் தனது சொந்த காரியங்களை மட்டும் கவனித்து வருகிறார் என்று சாடினார். அதோடு, வருகிற மழைக்காலங்களுக்கு முன்பு வெள்ளநீர் கால்வாய் திட்ட பணிகளை விரைந்து முடிக்காவிட்டால் இப்பகுதியில் உள்ள எம்பி மற்றும் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அரசு அதிகாரிகள் பொதுமக்களால் அசிங்கப்படுத்தப்படுவார்கள் என்றும் தெரிவித்துள்ளார். 

 இதையும் படிக்க     |   வறண்டது சிறுவாணி அணை கோவையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!