வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்ள தமிழகம் முழுவதும் கால்வாய்களை தூர்வாரும் பணி தொடங்கியது...

வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்ள தமிழகம் முழுவதும் கால்வாய்களை தூர்வாரும் பணி தொடங்கியுள்ளது.

வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்ள தமிழகம் முழுவதும் கால்வாய்களை தூர்வாரும் பணி தொடங்கியது...

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்க உள்ள நிலையில், கால்வாய்களை தூர்வார வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து சென்னை தாம்பரம் அடுத்த முடிச்சூரில் கால்வாய்களை தூர்வாரும் பணி இன்று தொடங்கியது. அடையாறு ஆறு மற்றும் அதனை சுற்றியுள்ள கால்வாய்களில் உள்ள செடிகளை ஜே.சி.பி. இயந்திரம் கொண்டு அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. இதனை காஞ்சிபுரம் மாவட்ட திட்ட அலுவலர் செல்வகுமார் ஆய்வு செய்தார். 

இதேபோல் மதுரை மாவட்டம், ஆனையூர் பகுதியில் கால்வாய் மற்றும் மழைநீர் வடிகால் பகுதிகள் தூர்வாரும் பணி தொடங்கியது. இதனை பத்திரப்பதிவு துறை அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு நீர்வரத்து கால்வாய்கள் தூர்வாரும் பணி தொடங்கியதாக தெரிவித்தார். மேலும் மழைக்காலம் என்பதால் டெங்கு காய்ச்சல் வராமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறினார்.